வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்து கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்களுடன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு இது குறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடி இருக்கின்றோம். இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
கிருஷ்ணகிரியில் கோர விபத்து; பேருந்து மீது மோதி 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
மேலும் பெங்களூரு பிரசாரத்திற்கு செல்வது குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் எனவும், இது நாங்கள் பேசுவதற்கான கூட்டம். என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம் என தெரிவித்தார். சட்டமன்றத்தில் தவறவிட்டதை நாடாளுமன்றத்தில் பெற திட்டமா என கேள்வி எழுப்பியதற்கு, இருக்கலாம் அது நல்ல எண்ணம் தானே என பதில் அளித்தார்.