டெல்டா மாவட்டத்துக்காரன் எனக் கூறிக்கொள்ளும் ஸ்டாலின்.! மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது ஏன்.? இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Apr 5, 2023, 2:26 PM IST

 காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி ஒப்பந்தம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள திமுகவின் 38 எம்பிக்கள் மூலம் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படுவதாக கடந்த நவம்பர் மாதமே மத்திய அமைச்சர் கூறிய நிலையில் திமுக அரசு முன்பேநடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


தஞ்சை பகுதியில் காவிரி திட்டம்

காவிரி படுகை பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு டெண்டர் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது விவசாயிகளை மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதனையடுத்து இந்த பிரச்சனை குறித்து தமிழக சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகள் பிரச்சனை எழுப்பினர். இந்தநிலையில் தலைமைசெயலக வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம், தமிழ்நாட்டின் உணவு தேவைகளை பூர்த்தி செய்வது டெல்டா மாவட்டம், இதில் விவசாயிகள் பாதிக்க கூடிய எந்த ஒரு தொழிற்சாலையும், அமைக்க கூடாது என்பதுதான் வேளாண் பாதுகாப்புச் சட்டத்தில் முக்கிய அம்சம் என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை.! அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜுவை கலாய்த்த சபாநாயகர்-என்ன காரணம் தெரியுமா?

பாலைவனமாக மாறும்

எனவே திமுகவின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூலமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன இருப்பு தீர்மானத்தை கொண்டு வந்து நிலக்கரி சுரங்கம் திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிடும். நிலக்கரி சுரங்கம் தொடர்பான அறிவிப்பால் விவசாயிகள் அச்சத்தில் இருக்கக்கூடிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் இது குறித்து பிரச்சனை எழுப்ப வேண்டும். உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நான் டெல்டா மாவட்டத்துக்காரன் எனக் கூறக்கூடிய முதலமைச்சர் தான் கடந்த 2006-11 ஆட்சியில் தான் மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது முதல் இப்போது வரை விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிராக திமுக உள்ளதாக குற்றம்சாட்டினார்.

திமுக தடுத்து நிறுத்தாதது ஏன்.?

ஆனால் அதிமுகவை பொறுத்தவரை மத்திய அரசுடன் கூட்டணி இருந்தபோது 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவிரி விவகாரத்தை வலியுறுத்தி 22 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்துவைக்கப்பட்டது, இதனையடுத்து தான் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தோம் என தெரிவித்தார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளிக்க மத்திய அமைச்சர் டெல்டா மாவட்டத்தில் மூன்று நிலக்கரி சுரங்கள் வரப்போவதாக அறிவித்த நிலையில் இதனை திமுக முன்னரே தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.  இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமூச்சாக ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.  நான் முதலமைச்சராக இருந்து போது கடிதம் மட்டுமே எழுதுவதாக குற்றம் சாட்டிய அப்போதே எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், இப்போது பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படியுங்கள்

நானும் டெல்டா காரன் தான்! ஒருபோதும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்-சட்டப்பேரவையில் ஸ்டாலின் உறுதி

click me!