பெண் காவலருக்கு திமுக நிர்வாகி பாலியல் தொல்லை.! ஸ்டாலின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி- இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jan 2, 2023, 1:28 PM IST

திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக திமுக நிர்வாகிகள் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத நிலையில் முதல்வர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 


பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

திமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துனைப்பொதுச்செயலாளர் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து  அந்த காவலர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உயர் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திமுக நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது அங்கிருந்த மற்ற திமுக நிர்வாகி மற்றும் விருகம்பாக்கம் திமுக எம்எல்ஏ இரண்டு நபர்களையும் கைது செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதன் காரணமாக அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tap to resize

Latest Videos

செவிலியர்கள் பணி நீக்கம் ஏன்..? இதற்க்கு யார் காரணம்..? மீண்டும் பணி வழங்கப்படுமா.? மா.சுப்பிரமணியன் விளக்கம்


முதல்வருக்கு கண்டனம்

இந்த சம்பவம் சமூகவலை தளத்தில் வெளியான நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்,

திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள்,

பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத,
காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்,
1/2

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu)

 

குற்றவாளிகளை கைது செய்திடுக

இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது விடியா ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து,கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கனிமொழி கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுக நிர்வாகி பாலியல் தொல்லை.!அதிகார மமதையின் வெளிப்பாடு -அண்ணாமலை ஆவேசம்

click me!