செவிலியர்கள் பணி நீக்கம் ஏன்..? இதற்க்கு யார் காரணம்..? மீண்டும் பணி வழங்கப்படுமா.? மா.சுப்பிரமணியன் விளக்கம்

By Ajmal Khan  |  First Published Jan 2, 2023, 12:54 PM IST

கொரோனா காலத்தில் பணியாற்றி ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


செவிலியர்கள் பணி நீக்கம்

கொரோனா தொற்று தீவிரமாக இருந்த இரண்டரை ஆண்டுகள் காலத்தில்  தங்களது உயிரை பணயம் வைத்து, கொரோனா நோயாளிகளுக்கு செவிலியர்கள் சிகிச்சை வழங்கினர். தங்களது குடும்பத்தை கூட கவனிக்க முடியாமல், பல்வேறு சிரமங்களுக்கு இடையே செவிலியர்கள் ஆற்றிய சேவை மகத்தானது என்றும் அப்படி பணியாற்றியவர்களை பணி நீக்கம் செய்த்து கண்டிக்க தக்கது என  பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில்  நலம் 36 நலம் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.  பொது சுகாதாரத்துறையில் 2200 காலி பணியிடங்கள் உள்ளன. மக்களை தேடி மருத்துவத்தில் இடைநிலை சுகாதார சேவைக்காக 270 பேர் தேவை. இது போன்று சுகாதாரத்துறையில் உள்ள காலி பணியிடங்களை இந்த செவிலியர்கள் நிரப்பப்படுவார்கள். 

Tap to resize

Latest Videos

தமிழக அரசின் நடவடிக்கை மிகுந்த வலியையும்,ஏமாற்றத்தையும் அளிக்கிறது- திமுகவிற்கு எதிராக சீறிய வேல்முருகன்

செவிலியர்களுக்கு மாற்றுப்பணி 

பணி நீட்டிப்பு வழங்கப்படாதவர்களுக்கு காலிப்பணியிடங்கள் உள்ள இடத்தில் மாற்றுப்பணி வழங்கப்படும்.  கொரோனா காலத்தில் பணியாற்றியதால் மாற்றுப்பணி வழங்கப்பட உள்ளது. 14 ஆயிரம் ஊதியம் வாங்கிய நிலையில், இது 18 ஆயிரம் ரூபாயாக உயர உள்ளது. செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வேணும் என கேட்டுள்ளதாகவும் தற்போது இடங்கள் இருக்கும் பணிகளில் பணி நிரந்தரம் வாய்ப்புகள் குறைவு எனவும் தங்களது ஆவணங்களை சரி செய்து கொண்டால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். மேலும் செவிலியர்கள் பணி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இந்த தவறுக்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமாய் உள்ளவரே இந்தத் தவறுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளாமல் அறிக்கை அளிப்பது அதிசயமாக உள்ளதாக கூறினார்.

புத்தாண்டு பரிசாக செவிலியர்களை பணியை விட்டு நீக்கி வீட்டிற்கு அனுப்பிய திமுக..! இபிஎஸ் ஆவேசம்

நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை

2019 ம் ஆண்டில் 2345 செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்டனர். 2323 பேர் பணியில் சேர்ந்தனர். 2020 ஆம் ஆண்டில் விண்ணப்பித்த 5736 பேரை பணிக்கு அழைத்ததில் 2366 பேர் பணியில் சேர்ந்தனர். அரசின் விகிதாச்சாரம் எதையும் பின்பற்றாமல் செவிலியர்களை பணிக்கு சேர்த்தது அதிமுக அரசு என குற்றம்சாட்டினார்.  உரிய முறையில்  விகிதாச்சாரத்தை பின்பற்றாமல் பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவிலியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. நீதிமன்றங்களின் உத்தரவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். அவர்களுக்கு மாற்றப்பணி வழங்கப்படும் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தமிழகத்தை கைப்பற்ற செம பிளான் போட்ட பாஜக..!! நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் மோடி போட்டியா.?

click me!