அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவிட்டார்... ஈபிஎஸ்-ஐ விளாசிய டிடிவி தினகரன்!!

Published : Jul 03, 2022, 02:56 PM IST
அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவிட்டார்... ஈபிஎஸ்-ஐ விளாசிய டிடிவி தினகரன்!!

சுருக்கம்

அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கி விட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கி விட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இந்த நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-வைத்தியலிங்கம் இடையே கருத்து வேறுபாடு..! புதிய குண்டை தூக்கிப் போட்ட நத்தம் விஸ்வநாதன்

அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. இந்த விவகாரம் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவை சேலத்தை சேர்ந்த ஒருவர் தான் அழித்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணத்திற்கும், பதவிக்கும் அடிமையானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள். அதிமுக பொதுக்குழுவிற்கு சென்று உண்மையை உடைத்த ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோரின் துணிச்சல் பாராட்டுக்குரியது. அதிமுக ஃபெயிலியர் ஆகிவிட்டது.

இதையும் படிங்க: திமுக கட்சி விளம்பரங்களில் புறக்கணிக்கப்படும் உதயநிதி ஸ்டாலின்..! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்

அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி. பழனிச்சாமியைப் பற்றி தெரிந்து கொண்டு அவருடன் கைகோர்த்து பன்னீர்செல்வம் செய்தது தவறு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் அழியாது என அன்றைக்கு அம்மா தெரிவித்தார். பாஜக அழிக்க நினைக்கிறது. திமுக அழிக்க நினைக்கிறது என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் சேலத்தை சேர்ந்த ஒருவர்தான் இந்த இயக்கத்தை அழித்து வருகிறார். அம்மாவின் சிங்கக் குட்டிகள் அமமுகவினர், நேர்மையான முறையில் போராடி அமமுக ஆட்சிக்கு வரும். மக்களை ஏமாற்றுவது தான் திராவிடமாடல் என்றால் அது வருத்தமளிக்கிறது. பத்து வருடம் கழித்தும் திமுக திருந்தவில்லை என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!