ராகுல்காந்தி அதிமுககிட்ட ஆதரவு கேட்டரா? கிடையவே கிடையாது... அடித்து சொல்லும் காங்கிரஸ்!!

By Narendran S  |  First Published Jul 3, 2022, 2:26 PM IST

யஸ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக வெளியான செய்தி முற்றிலும் போலியானது என்று காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


யஸ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக வெளியான செய்தி முற்றிலும் போலியானது என்று காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இதை அடுத்து இருவரும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் யஷ்வந்த் சின்கா சென்னை வந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவா..! செல்லவே..செல்லாது..! இபிஎஸ் அணிக்கு திகில் கிளப்பிய வைத்தியலிங்கம்

Tap to resize

Latest Videos

அவரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு ஆதரவு திரட்ட இன்று சென்னைக்கு வருகை புரிந்தார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதற்கிடையே யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க கோரி அதிமுக தலைமையை ராகுல் காந்தி தொடர்பு கொண்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க கோரி அதிமுக தலைமையை ராகுல் காந்தி தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நெருங்கும் பொதுக்குழு கிளைமாக்ஸ்.. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஸுக்கு கல்தா.? இபிஎஸ் தரப்பின் புது ஸ்கெட்ச்.!

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த வேட்பாளரான யஸ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. இது முற்றிலும் போலியானது மற்றும் தவறானது. அப்படி எந்த தொலைபேசி அழைப்பும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சிகள் நடக்கிறது. இதனை தாங்கும் அளவுக்கு கூட்டணி உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

click me!