கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக ஐ.நாவில் கையெழுத்து.. ஆனால் நுபுர் சர்மாவை ஏன் கண்டிக்கவில்லை..? சீமான் கேள்வி

Published : Jul 03, 2022, 01:56 PM IST
கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக ஐ.நாவில் கையெழுத்து.. ஆனால் நுபுர் சர்மாவை ஏன் கண்டிக்கவில்லை..? சீமான் கேள்வி

சுருக்கம்

ஐ.நாவில் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக இருப்போம் என்றும் பிரதமர் மோடி கையெழுத்து போட்டுவிட்டு, இதுவரை நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவை கண்டித்து ஏன் ஏதும் சொல்லவில்லை என்று நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.  

பிரதமர் மோடி ஏன் கண்டிக்கவில்லை:

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆறு தமிழர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,” பிரதமர் மோடி கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக இருப்போம் என்று ஐ.நாவில் கையெழுத்து போட்டுள்ளார். ஆமால் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபூர் சர்மாவை இதுவரை கண்டிக்கக் கூடவில்லை ஏன் என்று கேள்வியெழுப்பினார். மேலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சமூகநீதி என்றால் என்ன என்று கூற வேண்டும். என் அப்பா என்பதினால் அவர் செய்யும் தவறு சரியாகுமா ? என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் படிக்க:ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க ஓபிஎஸ் அழைக்கப்படுவாரா.? சஸ்பென்ஸ் வைத்து பேசும் ஜெயக்குமார்.!

மேலும் அதிமுகவில் தற்போது நடந்து வரும் சர்ச்சைகள் குறித்த கேள்விற்கு பதலளித்த சீமான், அதிமுகவில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சினை அதில் நாங்கள் கருத்து கூறி ஒன்றும் ஆகப் போவதில்லை. அதிமுகவில்  நிறைய பணம் இருக்கிறது. ஆனால் கட்சியில் கொள்கை இல்லை என கூறிய சீமான் இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் சமய அறநிலையத்துறை என மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு தான் பேரறிவாளன் விடுதலையை எட்டியதாக கூறிய அவர, திமுகவின் வெற்றியாக முதல்வர் பேசி வருவதாக குற்றச்சாட்டினார். மேலும் பேரறிவாளனை விடுதலை செய்யும் பொழுது நீதிபதி தாமஸ், இந்த தீர்ப்பு மீதமுள்ள ஆறு பேருக்கும் பொருந்தும் என தெரிவித்ததாக அவர் கூறினார்.

மேலும் படிக்க:ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவா..! செல்லவே..செல்லாது..! இபிஎஸ் அணிக்கு திகில் கிளப்பிய வைத்தியலிங்கம்

கடந்த 2018 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு தான் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தது என்றும் பேரறிவாளன் விடுதலையை தங்களுக்கான வெற்றியாக திமுக அரசு காட்டிக்கொள்ளுவதில் எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது என்று அவர் கூறினார். மேலும் ராஜூன் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியின் விடுதலை மாநில அரசின் கையில் தான் இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றமே தெரிவித்துள்ளது என்று சுட்டிகாட்டி பேசிய சீமான், தமிழக அரசால் அனுப்பப்படும் தீர்மானத்தை ஆளுநர் தள்ளிப்போட்டு காலம் தாழ்த்தி வருவதால் மீண்டும் ஒரு தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அக்னிபாத் மூலம் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆள் சேர்ப்பு:

மேலும் அக்னிபாத் திட்டம் குறித்து பேசிய அவர், மக்களின் வரிப்பணத்தை வீண் செய்கிறார்கள் என்றும் ஆர்எஸ்எஸ்க்கு மத்திய பாஜக அரசு ஆள் சேர்கிறது என்றும் குற்றச்சாட்டினார். அதோடுமட்டுமல்லாமல், அக்னிபாத் திட்டத்தில் எத்தனை பேரை எடுப்பார்கள் என்றும் புதிதாக ஆள் எடுப்பவர்களில் எத்தனை பேர் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.அக்னிபாத் திட்டத்தில் புதிதாக இராணுவத்திற்கு சேர்க்கப்படுவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளை திணித்து 4 வருடன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்ற தெரிவித்த அவர், நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.

மேலும் படிக்க:நெருங்கும் பொதுக்குழு கிளைமாக்ஸ்.. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஸுக்கு கல்தா.? இபிஎஸ் தரப்பின் புது ஸ்கெட்ச்.!

இந்த திட்டத்தின் மூலம் சேருபவர்கள் வெளியே வந்ததும், பாரதமாதாவிற்கு ஜே தான் போடுவார்கள் என்ற விமர்சித்தார். குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக நிற்கும் முதல் பழங்குடி பெண் திரௌபதி முர்முவை வரவேற்கிறோம் என்ற கூறிய சீமான்,  பாஜக வேட்பாளராக நிற்பது ஏற்புடையதல்ல என்று குறிப்பிடார். மேலும் பழங்குடி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது மோடியின் ஆட்சியில் தான் என்றும் கூறினார். முன்னதாக கடந்த 5 ஆண்டுகள் ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக இருந்து என்ன மாற்றம் நடந்தது. இந்தியாவில்  முதல் குடிமகனுக்கே கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தான் மிகப்பெரிய அவலம். அதனால் தற்பொழுது இவர் மட்டும் வந்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியெழுப்பினார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!