ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு 18 மாத கால திமுக ஆட்சியே சாட்சி..! ஸ்டாலினை கடுமையாக விளாசிய எடப்பாடி

Published : Dec 02, 2022, 12:06 PM ISTUpdated : Dec 02, 2022, 01:22 PM IST
ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு 18 மாத கால திமுக ஆட்சியே சாட்சி..! ஸ்டாலினை கடுமையாக விளாசிய எடப்பாடி

சுருக்கம்

அதிமுகவை பற்றி விமர்சனம் செய்வதற்கு தகுதி வேண்டும் தற்போது முதலமைச்சராக உள்ள மு க ஸ்டாலினுக்கு அந்த தகுதி இல்லையென கோவை உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவையை புறக்கணிக்கும் திமுகவின் அலட்சியப் போக்கை கண்டித்தும், சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு,  கட்டுமான பொருட்களின் விலை உயர்வு  சாலைகளை சீரமைக்காதது மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவினர் கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று  தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகள் ஆட்சி பொற்கால ஆட்சி,  கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டது .

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி..? ஆளுநரிடம் அண்ணாமலை புகார்..! தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட ஆர்.என்.ரவி

குடிமராமத்து தொடங்கி தடுப்பணைகள் வரை மக்கள் நலத்திட்டங்களை பார்த்து பார்த்து அதிமுக அரசு செய்து கொடுத்தது .கோவைக்கு 28 தடுப்பணைகள் கட்டிக் கொடுத்தது அதிமுகவின் சாதனை என தெரிவித்தார். ஆனால் திமுக ஆரசோ கோவைக்கு கொண்டுவந்த மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலை, ஆத்துப்பாலம் உக்கடம் மேம்பாலம் போன்ற பணிகள் கிடப்பில் உள்ளது. வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அதிமுகவில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி பற்றி அவதூறு கூறுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை என்ன பெரிய திட்டம் கொண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை கும்பகர்ணன் துக்கத்தில் இருந்து விழித்தெழவே இந்த உண்ணாவிரத போராட்டம் என தெரிவித்தார்.

ராணுவ வீரரை மிரட்டிய விடுதலை சிறுத்தை நிர்வாகி..! கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி திருமாவளவன் அதிரடி

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு  கட்டுமான பொருட்கள் விலை உயர்வு,  மக்களுக்கு அன்றாட தேவையாக இருக்கும் பால் விலை உயர்வு போன்றவற்றால்  மக்கள் மிகுந்த பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். அதிமுக கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை எல்லாம் முடக்கும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மக்களின் கோபங்களை கொந்தளிப்பை உணர்ந்து தமிழக முதலமைச்சர் செயல் பட வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு 18 மாத கால திமுக ஆட்சியே சாட்சி என தெரிவித்தார்.அதிமுகவை பற்றி விமர்சனம் செய்வதற்கு தகுதி வேண்டும் தற்போது முதலமைச்சராக உள்ள மு க ஸ்டாலினுக்கு அந்த தகுதி இல்லை, குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

இதற்கு திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.. ஆன்லைன் சூதாட்ட பலிகளுக்கு ஸ்டாலினே பொறுப்பு.. அண்ணாமலை சரவெடி.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!