ராணுவ வீரரை மிரட்டிய விடுதலை சிறுத்தை நிர்வாகி..! கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி திருமாவளவன் அதிரடி

By Ajmal Khan  |  First Published Dec 2, 2022, 8:23 AM IST

ராணுவ வீரரை மிரட்டியதாக ஆடியோ வைரலான நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மணிமாறனை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கி திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.


ராணுவ வீரருக்கு மிரட்டல்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் டெல்லியில் இப்போது பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, விசிக தலைவர் திருமாவளவனை விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "திருமாவளவன் தனி தமிழ்நாடு கேட்கிறாராம். முதலில் அவரால் தனியாக ஒரு வார்டில் நின்று வெல்ல முடியுமா? இந்தளவுக்கு உங்களைப் பேச வைத்தது ஆட்சியாளர்களின் தவறு. கருத்துச் சுதந்திரம் எனச் சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாமா என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கடுமையாக அந்த நபரை சாடியிருந்தனர்.

Tap to resize

Latest Videos

இதற்கு திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.. ஆன்லைன் சூதாட்ட பலிகளுக்கு ஸ்டாலினே பொறுப்பு.. அண்ணாமலை சரவெடி.!

ஆதரவு தெரிவித்த பாஜக

இந்தநிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின்  லத்தூர் ஒன்றிய செயலாளர் மணிமாறன் என்பவர் ராணுவ வீரரைத் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோவுன் வெளியானது. அதில், திருமாவளவனை எப்படித் தரக்குறைவாகப் பேசலாம் என்றும் அவரிடம் மரியாதையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்கிறார். அதற்க்கு ராணுவ வீரர் குரு,  பீரங்கியை பார்த்தே அஞ்சாத நான் இதற்குப் பயப்படுவேனா எனக் கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன்,  நீ டெல்லியில் இருந்தாலும், உங்க குடும்பம் இங்க தானா இருக்காங்க.. அவங்க உயிரோடு இருக்கணும்னா ஒழுங்கா மன்னிப்பு கேளு" என மிரட்டியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலை தளத்தில் பரவிய நிலையில் பலரும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து பாஜக நிர்வாகிகள் ராணுவ வீரரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆளுநர் ஆர் என் ரவி செல்லுமிடமெல்லாம் கருப்பு கொடி காட்டப்படும்..? எச்சரிக்கை விடுத்த கி.வீரமணி

பொறுப்பில் இருந்து நீக்கிய திருமா

இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டம் (தெற்கு) இலத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் திரு. மணிமாறன் அவர்கள் கட்சியின் நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மூன்று மாத காலத்திற்கு அப்பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளார். மேலும்  மணிமாறன்  15 நாட்களுக்குப் பின்னர் கட்சியின் தலைமையகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அணுகி தனது நிலை குறித்து உரிய விளக்கம் அளிக்கலாம் என கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

தீண்டாமையைக் கடைப்பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… விசிக எ.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்!!

click me!