பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி..? ஆளுநரிடம் அண்ணாமலை புகார்..! தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட ஆர்.என்.ரவி

By Ajmal KhanFirst Published Dec 2, 2022, 9:38 AM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த போது பாதுகாப்பு குளறுபடி இருந்ததாகவும், மெட்டல் டிடெக்டர் சரியான முறையில் வேலை செய்யவில்லையென ஆளுநரிடம் அண்ணாமலை புகார் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார்.

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி

சென்னையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி, நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி வந்திருந்தார். இதன் தொடக்கவிழா நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் 180 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அரங்கத்திற்கு வந்திருந்தனர்.

ஆளுநரிடம் பாஜக புகார்

இந்தநிலையில் பாதுகாப்பு ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட கையடக்க மெட்டல் டிடெக்டர்கள், டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் வெடிகுண்டு கண்டறிதல் கருவிகள் ஆகியவை முறையாக இல்லாததால், பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் இருந்ததும், பராமரிப்பு மற்றும் மாற்றியமைக்க காலதாமதம் ஏற்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர். என் ரவியிடம் அண்ணாமலை புகார் தெரிவித்து இருந்தார்.

ஆளுநர் ஆர் என் ரவி செல்லுமிடமெல்லாம் கருப்பு கொடி காட்டப்படும்..? எச்சரிக்கை விடுத்த கி.வீரமணி

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்க்கு விளக்கம் அளித்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு  குறைப்பாடு குறித்து எந்த ஒரு அரசு துறையும் எங்கள் கவனதிற்கு கொண்டுவரவில்லை. பாதுகாப்பு குறைபாடு தொடர்பான எந்த புகாரும் தமிழக காவல்துறையில் இல்லையென தெரிவித்து இருந்தார்.

விளக்கம் கேட்ட ஆளுநர்

இந்தநிலையில் அண்ணாமலையில் புகாரை தொடர்ந்து  தமிழக அரசின் விளக்கத்தை கேட்பதற்காக, தலைமைச்செயலாளர் இறையன்புவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தர வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்

ராணுவ வீரரை மிரட்டிய விடுதலை சிறுத்தை நிர்வாகி..! கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி திருமாவளவன் அதிரடி

click me!