நிவாரண உதவிகள் தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.. வைகோ, திருமா,முதல்வருடன் சந்திப்பு.

Published : May 13, 2022, 02:31 PM IST
நிவாரண உதவிகள் தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.. வைகோ, திருமா,முதல்வருடன் சந்திப்பு.

சுருக்கம்

இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கும் 177 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அங்குள்ள தமிழர்களுக்கு கிடைப்பது உறுதி செய்ய வேண்டுமென வைகோ திருமாவளவன் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் வலியுறுத்தி உள்ளனர். 

இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கும் 177 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அங்குள்ள தமிழர்களுக்கு கிடைப்பது உறுதி செய்ய வேண்டுமென வைகோ திருமாவளவன் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் வலியுறுத்தி உள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த  அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். 

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார  நெருக்கடியில் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. மக்கள் உண்ண உணவின்றி அல்லாடி வருகின்றனர். அந்நாட்டிற்கு முழுக்க முழுக்க இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வரிசையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  இலங்கையில் வாடும் தமிழ் மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் உணவுப் பொருட்கள் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான வைகோ விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திராவிட இயக்க பேரவைத் தலைவர் சுபவீரபாண்டியன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனால் வெடித்துள்ள கலவரம் போன்றவற்றால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. தமிழர்களின் துயர் துடைக்கக் கூடிய வகையில் இலங்கையில் உள்ள மக்களின் துயர் துடைக்க கூடிய வகையிலும் அந்நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 177 கோடி ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்களை தமிழக அரசு வழங்க உள்ளது. இத்தகைய பொருட்களை விநியோகம் செய்வதை கண்காணிக்க தமிழக அரசு தமிழ் அதிகாரிகள் செல்லவுள்ளதாக தங்களிடம் முதல்வர் கூறியதாக வைகோ கூறினார். இந்நிலையில் அங்கு தவிக்கும் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க தமிழக முதலமைச்சர் உள்ளார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு பிறகுதான் தான் நிம்மதி பெருமூச்சி விடுவதாகவும் கூறினார்.


மேலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றிய அரசின் அனுமதி பெற்று இலங்கையில் நிவாரண பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்ததாக வைகோ கூறினார். பல ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் சந்தித்து வரும்  பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தங்களிடம் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக அரசு மனித நேய அடிப்படையில் எடுக்கும் நடவடிக்கையை பாராட்டுவதுடன் நிவாரண பொருட்கள் தமழ் மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!