ராஜ்யசபா சீட்டை தட்டிப் பறிக்க போகும் திமுக- அதிமுக வேட்பாளர் யார்? போட்டி போடும் நிர்வாகிகள்..!

Published : May 13, 2022, 01:03 PM ISTUpdated : May 13, 2022, 01:09 PM IST
ராஜ்யசபா சீட்டை தட்டிப் பறிக்க போகும் திமுக- அதிமுக வேட்பாளர் யார்? போட்டி போடும் நிர்வாகிகள்..!

சுருக்கம்

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவி காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிதாக அதிமுக மற்றும் திமுகவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள யார் அந்த 6 பேர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாநிலங்களவை தேர்தல்-ஜூன் 10
 
தமிழகத்தில் இருந்து தேர்நெதெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த மாதம் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 24 ஆம் தேதி தொடங்குகிறது. இதனையடுத்து அடுத்த மாதம் (ஜூன்) 10ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பாக 4 பேரும் அதிமுக சார்பாக இரண்டு பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

திமுக - யார் அந்த 4 பேர்?

34 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து 1 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கலாம், எனவே இதில் திமுக சார்பாக 4 பேரையும் அதிமுக 2 பேரையும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க உள்ளது. திமுக சார்பாக ஆர்.எஸ்.பாரதி, டிகே.எஸ். இளங்கோவன், ராஜேஷ்குமாரின் பதவி காலம் முடிவடைகிறது. எனவே இதில் ஆர்.எஸ் பாரதி மற்றும் ராஜேஸ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டு இரண்டுகளில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்க தமிழ்செல்வன், கிரிராஜன், சல்மா, முத்துராமலிங்கம்,தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் சரவணன்  உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி திமுகவிடம் கேட்டகப்படுவதாக கூறப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பதவி காலமும் முடிவடைகிறது. எனவே அவருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில்  திமுகவை காங்கிரஸ் தலைமை அனுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுகவில் கடும் போட்டி

அதிமுகவை பொறுத்தவரை இரண்டு இடங்களுக்கு 400க்கும் மேற்பட்டவர்கள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள், முன்ளாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக மூத்த தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தமிழ் மகன் உசேன், பொன்னையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார்  உள்ளிட்டவர்கள் பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த சையது கானிற்கு ஓபிஎஸ் வழங்குவார் என கூறப்படுகிறது. அதே போல ஈபிஎஸ்ம் தனது ஆதரவாளர் சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவனுக்கு வழங்கப்பட இருப்பதாக அதிமுக தலைமை வட்டாரம் தெரிவித்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!