டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல்.. டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் அதிரடி

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2020, 4:42 PM IST
Highlights

இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் மும்மரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்கின்ற மூன்று மருந்து  நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது, இந்நிலையில் இந்த தடுப்பூசியின் 3வது-இறுதிக்கட்ட பரிசோதனை டிசம்பரில் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நிறைவடைய உள்ளது.

கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாத தொடக்கத்திலோ மக்களின் பயன்பாட்டிற்கு அவசர ஒப்புதல் பெற வாய்ப்பு இருப்பதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக் கட்ட சோதனையில் உள்ள நிலையில் டாக்டர் குலேரியா இவ்வாறு கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் சர்வதேச நாடுகளும் வைரசுக்கு எதிரான தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் இந்தியாவும் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியின் மருந்து பரிசோதனை இந்தியாவில் நடத்தி, பின்னர் தடுப்பூசிகளை தயாரித்து வினியோகிக்க புனேயை சேர்த்த பிரபல மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா உரிமம் பெற்றுள்ளது. 

இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் மும்மரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்கின்ற மூன்று மருந்து  நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது, இந்நிலையில் இந்த தடுப்பூசியின் 3வது-இறுதிக்கட்ட பரிசோதனை டிசம்பரில் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நிறைவடைய உள்ளது. அதேசமயம் இந்த மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தில் ஒப்புதல் பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாக சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா கூறி இருக்கிறார். அதேபோல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் 6 தடுப்பூசி சோதனைகளும் இறுதிகட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இது குறித்து  தெரிவித்துள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் குலேரியா, தரவுகளின் அடிப்படையில் தடுப்பூசி பாதுகாப்பானதா மற்றும் பயனுள்ளதா என்பதை உறுதி செய்யமுடியும்.  தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும்  அதன் திறனில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளப்படாது, 

இதுவரை 70 முதல் 80 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கடுமையான பக்க விளைவுகள் ஏதும் தென்படவில்லை, இத் தடுப்பூசி பாதுகாப்பானது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசிகள் இறுதி நிலையை எட்டிய உடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கப்படும், அதற்கு அவசர ஒப்புதல் கிடைத்தவுடன் அது மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இந்தியாவில் 100 மில்லியன் அளவு டோஸ் உற்பத்தி செய்யப்பட உள்ளது.  ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகள் நிறைவேறுவதற்கு முன்னரே சீனா தனது 4தடுப்பூசிகளுக்கும், ரஷ்யா தனது 2 தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடதக்கது. அதேபோல் டிசம்பர் 2-ஆம் தேதி அமெரிக்க நிறுவனமான பிஃப்சர் மற்றும் அதன் கூட்டாளரான பயோஎன்டெக் தயாரித்த எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிக்கு இங்கிலாந்து அவசர ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!