தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன்... ரஜினி சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2020, 2:29 PM IST
Highlights

எல்லாருக்கும் ஒரு தலையெழுத்து இருக்கு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால், கொரோனா காலம் என்பதால் நோய்த் தொற்று அபாயம் இருப்பதால், தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன். என தெரிவித்துள்ளார். 

சிறுநீரக் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால், கொரோனா காலம் என்பதால் நோய்த் தொற்று அபாயம் இருப்பதால், தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன் என ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.  

ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்க போவதாகவும் அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இந்த அறிவிப்பை ரஜினி வெளியிட்டார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அவர், தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என கூறியுள்ளார். 

மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம் என்றும், இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல என கருத்து பதிவிட்டுள்ளார். வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல்  உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்... என்று பதிவிட்டுள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளரை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது, என் ரசிகர்களுக்காக என் உயிரே போனாலும் கவலையில்லை. கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன். டிசம்பர் 2017-இல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன், தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி, அதில் தோற்றால் அது மக்களின் தோல்வி என்றே அர்த்தம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். 

எல்லாருக்கும் ஒரு தலையெழுத்து இருக்கு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால், கொரோனா காலம் என்பதால் நோய்த் தொற்று அபாயம் இருப்பதால், தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன். என தெரிவித் துள்ளார். மேலும், ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம், அற்புதம் அதிசயம் நிகழும் எனவும் அண்ணாத்த படத்தை முடித்து தர வேண்டியது என் கடமை எனவும் அவர் கூறியுள்ளார். 
 

click me!