
ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல்...?
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகுமாறு, அதிமுக எம்.எல் ஏக்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவுரை.
தமிழகத்தில் நிலவி வரும் ஒரு குழப்பமான அரசியலுக்கு நடுவே,உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இன்று ஒரே நாளில் பல அதிரடி முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதிமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துக் கொள்ள 12 பேர் மட்டும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்போது, வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்றும்,அதற்காக ஆயத்தமாக இருங்கள் என்றும் ஓ.பன்னீர் செல்வம் ,அதிமுக எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.