கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குடும்பத்தினர் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை...

By Ramya s  |  First Published Apr 22, 2023, 1:12 PM IST

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குடும்பத்தினர் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்


கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதையும் படிங்க : Karnataka Election 2023: கர்நாடகாவில் பிரதமர் மோடியா? ராகுல் காந்தியா? ஏசியாநெட் நியூஸ் டிஜிட்டல் சர்வே முடிவு

Tap to resize

Latest Videos

இதனிடையே காங்கிரஸ் வேட்பாளர்கள் தாக்கல் செய்த விண்ணப்பங்களில் உள்ள குறைகளைக் கண்டறியவும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தாக்கல் செய்த தவறுகளை சரிசெய்யவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் அலுவலகம் பல்வேறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளை அழைத்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.. கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார், இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரின் மனைவி உஷா, மகன், மகள், மருமகன் ஆகியோர் ஹெலிகாப்டரில் மூலம் தர்மஸ்தலா சென்றனர்.. அவர்கள் மங்களூரு வரை ஹெலிகாப்டரில் சென்ற நிலையில் அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டரை சோதனை செய்ய சென்றபோது, விமானி ராம் தாஸ் சோதனை செய்ய மறுத்ததுடன், இது தனியார் ஜெட் என்று கூறினார். அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்த நிலையில், தேர்தல் அதிகாரிகள் பின்னர் சோதனையில் ஈடுபட்டனர்.. 

இதையும் படிங்க : உண்மையான அதிமுக நாங்க தான்.. ஓபிஎஸ் மனுவை எதுக்கு ஏத்துக்கிட்டீங்க.. எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் கடிதம்!

click me!