திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் அறிவிப்பு..! மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை பிரித்தும் உத்தரவு

By Ajmal Khan  |  First Published Sep 18, 2022, 3:47 PM IST

தி.மு.க. 15.ஆவது பொதுத்தேர்தல் மாவட்டக் கழகத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான தேதியை அறிவித்துள்ள திமுக தலைமை, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகளை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 


வேட்புமனு தேதி அறிவிப்பு

திமுக மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர்களுகான வேட்பு மனு தாக்கல் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்ற பின்வரும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் (மகளிர் ஒருவர் கட்டாயமாக இருத்தல் வேண்டும்) ஆகிய பொறுப்புக்களுக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில் பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25,000/- கட்டணமாக தலைமைக் கழகத்தில் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

உதயநிதி செங்கலை தூக்கி காண்பித்த ராசி..! செங்கல், ஜல்லி பொருட்கள் விலை உயர்ந்து விட்டது- செல்லூர் ராஜூ

வேட்புமனு படிவ கட்டணம் ரூ.1000

வேட்புமனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர், ஒன்றிய நகர,பகுதி, மாநகர செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும். வேட்புமனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.1000/- கட்டணம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற - நடைபெற்றிடவும் கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்கள் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, 

பண்ருட்டி ராமசந்திரன் அரசியலுக்கு வந்த போது, டவுசர் அணிந்து பள்ளிக்கூடம் சென்றவர் இபிஎஸ்- கோவை செல்வராஜ்

சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைப்பு

கோவை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் சிங்காநல்லூர்,கோவை தெற்கு, கோவை வடக்கு,

கோவை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் மேட்டுப்பாளையம்,தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம். அவினாசி

கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் சூலூர்,கிணத்துகடவு வால்பாறை (தனி) பொள்ளாச்சி

திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் வடக்கு,திருப்பூர் தெற்கு, பல்லடம்

திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் உடுமலைபேட்டை,மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம்

மதுரை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய, மதுரை மேற்கு

தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் தருமபுரி, பென்னாகரம்

தருமபுரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் அரூர் (தனி), பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு மேற்கண்ட சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியதாக மாவட்டக் கழகங்கள் அமையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்..! தேர்வை ஒத்திவைக்க வேண்டும்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்- ஓபிஎஸ்

 

click me!