பிரதமர் மோடி இப்படி வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க தயார்..! பாஜகவை உசுப்பேத்திய திருமாவளவன்

Published : Sep 18, 2022, 12:46 PM ISTUpdated : Sep 18, 2022, 12:48 PM IST
பிரதமர் மோடி இப்படி வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க தயார்..! பாஜகவை உசுப்பேத்திய திருமாவளவன்

சுருக்கம்

சாதிய அமைப்புகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்வதாக தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். 

கடுமையான நடவடிக்கை- திருமாவளவன்

சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் 77 வது நினைவு நாளை முன்னிட்டு காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள ரெட்டைமலை சீனிவாசன் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜகவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவோம். மதுரை மற்றும் கோவையில் சனாதன சக்திகளை வேரருக்கும் கருத்தரங்கம் நடை பெற உள்ளது என தெரிவித்தார்.  

பாஞ்சாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடந்திருப்பது குரூரமான வன்முறை என்ற  அவர், அவர்கள் பேசியதை அவர்களே சமுக தளங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். உடனடியாக பாஞ்சாங்குளம் விஷயத்தில் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும் முதல்வருக்கும் எனது நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். ஆனாலும் பாஞ்சான்குளம் விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கவேண்டும் என்றார். சமூகப் புறக்கணிப்பு என்பது பெரிய கொடுமை எனவும்  பள்ளி பிள்ளைகள் மீது ஜாதி வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

உதயநிதி செங்கலை தூக்கி காண்பித்த ராசி..! செங்கல், ஜல்லி பொருட்கள் விலை உயர்ந்து விட்டது- செல்லூர் ராஜூ

மோடிக்கு ரத்தின கம்பள வரவேற்பு

3000 ஆண்டுகால வரலாறு கொண்டது சாதி. பிறப்பின் அடிப்படையில் ஒவ்வொரு வருக்குமான செயல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதி அடிப்படையில் தான் இங்கு அக்ரஹாரம் மற்றும் தெருக்கள் அமைந்துள்ளதாக கூறினார். குறிப்பிட்ட சாதி அடர்த்தி  அதிகமாக உள்ள பகுதிகளில் அதே சாதியைச் சார்ந்த வேட்பாளரை நிறுத்தி தான் அரசியலில் வெற்றி பெற முடிகிறது. அந்த சாதியை தவிர்த்து வேறு சாதியினரை அந்த பகுதியில் வேட்பாளராக நிறுத்தினால் மக்கள் விழிப்புணர்வு இன்றி வாக்களிக்க மாட்டார்கள். சாதிய அமைப்புகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்கின்றனர் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஜாதி வாரியாக வேட்பாளர்களை அறிவிக்கின்றனர். பெரியாராக மாறி சனாதான எதிர்ப்பாளியாக மோடி வந்தால் அவரை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என தெரிவித்தார்.  

இதையும் படியுங்கள்

திருக்குவளை சமஸ்தான கொத்தடிமை ஆர்.எஸ்.பாரதிக்கு நாவடக்கம் தேவை..! இறங்கி அடித்த ஜெயக்குமார்

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!