
ஏன்டா இரட்டை இலையை முடக்கினோம்?! என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெறித்து அலறுமளவுக்கான காரியங்களை போட்டி போட்டுக்கொண்டு செய்து வருகின்றனர் ஓ.பி.எஸ். அணியும், ஈ.பி.எஸ். அணியும்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயர் இரண்டையும் மீட்டெடுப்பதி பன்னீர் அணியும், பழனிச்சாமி அணியும் மிகப்பலமாக மோதிக் கொண்டுள்ளனர்.
இணைப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது, நடக்கிறது என்று ஒரு பக்கம் இழுத்துக் கொண்டே போனாலும் கூட சின்னத்தை கைப்பற்ற இருவரும் போட்டி போடுவதை பார்க்கையில் இணைப்பு சாத்தியமேயில்லை என்பது புலனாகிறது.
இது ஒரு புறமிருக்க, ’நீங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று நிரூபிக்க தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்.’ என்று இரு தரப்புக்கும் உத்தரவிட்டிருந்தது தேர்தல் கமிஷன்.
தமிழன்னா ச்சும்மாவா?!