
இரட்டை இலை விவகாரத்தில் நேற்று ஒ.பி.எஸ் அணி கூடுதல் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று சசிகலா தரப்பில் 70 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பிரமான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்து சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என இரண்டாக செயல்பட்டு வந்தது.
இரு அணிகளுமே, நாங்கள்தான் உண்மையான அதிமுக எனவும், இரட்டை இலை சின்னத்தை எங்களுக்குதான் ஒதுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தன.
இதையடுத்து தேர்தல் ஆணையம் விசாரணை முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
இதை தொடர்ந்து ஒ.பி.எஸ் அணியினர் தங்களுக்கு 40 லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவிப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்திருந்தனர்.
மேலும் 6,500 பக்க ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து சசிகலா தரப்பில் 12,752 பேரிடம் கையெழுத்து வாங்கிய பிரமாண பத்திரங்களை கூடுதலாக தாக்கல் செய்தனர்.
சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் இரட்டை இலை மற்றும் பொதுச்செயலாளர் பிரச்னை குறித்து கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 16ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.
இந்நிலையில், சசிகலா தரப்பில் மேலும் 70 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.