பன்னீருக்கு இரட்டை மின் கம்பம்... சசிக்கு ஆட்டோ ரிக்ஷா - அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்

Asianet News Tamil  
Published : Mar 23, 2017, 11:09 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
பன்னீருக்கு இரட்டை மின் கம்பம்... சசிக்கு ஆட்டோ ரிக்ஷா - அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்

சுருக்கம்

election commission allots new symbols foe ops sasi team

இரட்டை இலை உனக்கா...? எனக்கா...? என்ற சண்டையில், பன்னீருக்கும் கிடைக்கவில்லை. சசிகலாவுக்கும் கிடைக்கவில்லை. எம்ஜிஆரின் சின்னத்தை மொத்தமாக முடக்கி போட்டுவிட்டது, இவர்களது அதிகார சண்டை.

இரட்டை இலை முடக்கப்பட்டவுடன், காலை 10 மணிக்குள் புதிய சின்னங்களை பரிந்துரைத்து பெற்று கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

காலை தேர்தல் ஆணையர் அலுவலக வேலைகள் தொடங்கிய உடனே, அங்கு காத்திருந்த ஓ.பி.எஸ். அணியினர், தங்களுக்கு இரட்டை விளக்கு சின்னமும், அம்மா அதிமுக என்ற கட்சியின் பெயரும் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதேபோன்று சசிகலா தரப்பிலும் தொப்பி, ஆட்டோ ரிக் ஷா, கத்திரிகோல் போன்ற சின்னங்களை முன்வைத்து இவற்றில் ஏதாவது ஒரு சின்னம், தங்களுக்கு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை விடுத்த ஒரு மணிநேரத்துக்கு உள்ளாகேவே, இருவருக்கும் கட்சி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரட்டை விளக்கு கேட்ட ஓ.பி.எஸ். அணிக்கு இரட்டை மின் கம்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா அணிக்கு தாங்கள் கேட்ட சாய்ஸில் இருந்து ஆட்டோ ரிக்ஷாவே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் பெயர்கள், பரிசீலிக்கப்பட்டு, இன்று மதியமோ, மாலையோ அறிவிக்கப்படும்.

 

ஊரு ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். இவர்கள் சண்டையால் கூத்தாடிக்கு அல்ல. திமுகவுக்கு தான் கொண்டாட்டம்.

PREV
click me!

Recommended Stories

MK Stalin: வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றியை கூட சொல்லாத காங்கிரஸ்..! முதல்வர் பரபரப்பு ட்வீட்..
TN CM Vijay: ஜோசப் விஜய் எனும் நான்..! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..