பிள்ளையார் பிடித்த இ.பி.எஸ்! அபிநயம் பிடித்த ஓ.பி.எஸ்: மோடி மேடையில் ஈகோ ரேஸ்

By Vishnu Priya  |  First Published Mar 6, 2019, 5:59 PM IST

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க.வின் பிரம்மாண்டமான பிரசார பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 


சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க.வின் பிரம்மாண்டமான பிரசார பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டிருக்கும் இந்த மேடையில் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமாக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமிக்கும், ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமாக இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் பெரிய ஈகோ ரேஸ் ஓடியதுதான் ஹாட் ஹைலைட்டே. 

Tap to resize

Latest Videos

மேடைக்கு வந்த மோடி இவர்கள் இருவரையும் விட பா.ம.க. தலைவர் ராமதாஸை ஓவராக அட்மையர் செய்ததிலேயே இவர்கள் இருவரும் கடுப்பானார்கள். அதன் பிறகு பிரதமரை இம்ப்ரஸ் செய்வதற்காக இரு  முதவ்லர்களும் நடத்திய ரேஸ்தான் செம்ம சுவாரஸ்யம். 


பிரதமருக்கு அன்பளிப்பாக ஒரு விநாயகர் சிலையை பரிசளித்தார் எடப்பாடியார். அடுத்து இரண்டு பேர் சேர்ந்து தூக்கி வந்தனர் பன்னீர்செல்வம் வழங்கிய நடராஜர் சிலையை. சமீபத்தில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தபோது நடராஜர் சிலையை பார்த்து மோடி ஆச்சரியப்பட்டிருந்ததால், அதேபோல் நடராஜர் சிலையை தேர்வு செய்தாராம் பன்னீர். இவரது அன்பளிப்பு இவ்வளவு ‘வெயிட்’டாக இருந்ததில் எடப்பாடியார் நொந்துவிட்டார். 

இதில் கெத்தாக நின்று கொண்டிருந்த பன்னீருக்கு பியூஸடிக்கும் வகையில் அடுத்த நொடியில் மிகப்பெரிய மலர்கூடை ஒன்றை பிரதமருக்கு வழங்கி, அவரது கண்களை குளிர்வித்தார் முதல்வர் எடப்பாடியார். அதை தொட்டுவிட்டு, தன் மெய்க்காப்பாளர் பக்கம் மோடி திரும்ப, முதல்வரே மீண்டும் அதை தூக்கி அந்த மெய்க்காப்பாளரிடம் கொடுத்து, தன் பவ்யத்தை காட்டினார். 

ஆக மொத்தத்தில்  இ.பி.எஸ்.., ஓ.பி.எஸ். இரண்டு பேரும் மோடி மீதான தங்களின் பவ்யத்தையும், பாசத்தையும் போட்டி போட்டுக் கொண்டு காட்டியதை கண்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர் பி.ஜே.பி.யின் மாநில நிர்வாகிகள். 
இந்நிலையில், எடப்பாடியார் மற்றும் பன்னீர்செல்வம் இருவரையும் பேச அழைக்கையில், மாஜி அமைச்சர் வைகைசெல்வன் ஓவராய் புகழ்ந்தும், சற்றே நாக்கை சுழற்றிப் பேசியதும் பி.ஜே.பி.யின் வி.ஐ.பி.க்களை வெறுப்பாக்கியது. 
ஓஹோ!

click me!