மோடி பிரதமராக வேண்டும் என ஜெயலலிதாவே சொல்லி இருப்பார்... ஓபிஎஸ் அதிரடி...!

By vinoth kumar  |  First Published Mar 6, 2019, 5:50 PM IST

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாடே சொல்கிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். 


நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாடே சொல்கிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். 

சென்னை கிளாம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் தீய சக்திகளை அழிக்கவே அதிமுக வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது. 10 ஆண்டுகளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது, அவர்களின் குடும்பம் தான் பலன் அடைந்தது. தமிழகமும், மக்களும் பயன்பெறவில்லை. சென்னையில் ராகுலை பிரதமர் என கூறிய ஸ்டாலினுக்கு கொல்கத்தாவில் அதை சொல்ல தைரியமில்லை என விமர்சித்தார். 

Tap to resize

Latest Videos

தமிழகத்திற்கு நலன் கிடைக்கும் வேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்திருப்பாரோ, அந்த முடிவை தான் எடுத்துள்ளோம். மோடி பிரதமராக வேண்டும் என்று நாடே சொல்கிறது. 

பிரதமர் வேட்பாளர் யார் என எதிர்க்கட்சிகளால் சொல்ல முடியுமா? ஜல்லிக்கட்டு மசோதாவை கொண்டு வர பிரதமர் மோடி உதவினார். எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமராகும் தகுதி யாருக்கும் இல்லை என்று சாடியுள்ளார்.  பொதுக்கூட்டத்தில் கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது எதிர்க்கட்சிகளுக்கு அடிவயிறு கலங்கியிருக்கும் என்று கூறினார். 

click me!