இனி தமிழில் தான் ..! ஒட்டு மொத்த தமிழ் மக்களை ஒத்த வார்த்தையில் கவர்ந்த மோடி...!

By ezhil mozhiFirst Published Mar 6, 2019, 5:57 PM IST
Highlights

காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும்  பாஜக - அதிமுக பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களை கவரும் வகையில் பலவேறு முக்கிய திட்டங்களை பற்றியும், தன் ஆட்சி கால  சாதனை பற்றியும், தமிழ் மண்ணின் பெருமை மற்றும் தமிழ்  கலாச்சாரம் என அனைத்தையும்  புகழ்ந்து தள்ளினார்.
 
பிரதமர் பேசியது..

காஞ்சி மண்ணிற்கு வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்... தமிழகத்தில் உள்ள கலாச்சாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.. உலகத்திலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பழமையான மொழி தமிழ் மொழி ...

இனி விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள் இருக்கும் என்றும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இனி  புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் என்ற பெயரில் அழைக்கப்படும் என்றும் தெரிவித்தார்...

ஜெயலலிதா கனவு கண்ட தமிழகத்தை உருவாக்க  நடவடிக்கை எடுத்து வருகிறோம்...விக்கிரவாண்டி தஞ்சாவூர்  வரையிலான சாலை திட்டம்  சென்னையையும் டெல்டாவையும் இணைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தமிழக விமான நிலையம், விமானத்தில் தமிழ் மொழியில்  அறிவிப்பு வெளியாகும் என்ற அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

இதற்கு முன்னதாக தமிழகத்தில் இந்தி திணிப்பு பற்றி பெரும்  குற்றசாட்டு எழுந்தது. இந்த நிலையில் தமிழ்மொழிக்கு மிகவும்  முக்கியதுவம் கொடுக்கும் விதமாக, இனி விமான நிலையம் மற்றும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு வெளியாகும் என்ற அதிரடி முடிவை அறிவித்து உள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

click me!