மீண்டும் ஜூலை 1-ல் சசிகலா ஆஜராக வேண்டும் : எழும்பூர் நீதிமன்றம் அதிரடி!!

First Published Jun 21, 2017, 2:52 PM IST
Highlights
egmore court order sasikala should appear again


அந்நிய செலாவணி முறைகேடு குறித்த 2 வழக்கில் இன்று சசிகலா மீது குற்றசாட்டு பதிவானது. மேலும் 2 வழக்கு குறித்த விசாரணைக்கு ஜூலை 1 ஆம் தேதி ஆஜராகுமாறு சசிகலாவிற்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்த வழக்கை விசாரித்து வரும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் சசிகலாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் எனவே காணொலி காட்சி மூலம் ஆஜராவதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுகொண்ட நீதிமன்றம் இன்று காணொலி காட்சியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து இன்று இதுகுறித்த வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா காணொலி காட்சி மூலம் எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஆஜராகினார். அவருடன் அவரது உறவினர் பாஸ்கரனும் நேரில் ஆஜரானார்.

சசிகலாவிடம் 50 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றதையடுத்து சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டள்ளது.

இதுகுறித்த 4 வழக்குகளில் 2 வழக்குகளுக்கு மட்டுமே குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும் உள்ள 2 வழக்குகளில் விசாரணைக்காக ஜூலை 1 ஆம் தேதி சசிகலா காணொலி காட்சி மூலம் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!