தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பிஹார் சென்று பிரதமரை உருவாக்குகிறாராம்.! இறங்கி அடிக்கும் இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jun 25, 2023, 7:24 AM IST

இரண்டு கோடியில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைத்துவிட்டு, படிக்கும் மாணவர்களுக்கு 80 கோடியில் பேனா வாங்கி கொண்டுங்கள், மாணவர்கள் பயனடைவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மதுபான விற்பனையில் ஊழல்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழகத்தில் 6000 மதுபான கடைகளில் மூலமாக ஒரு நாளைக்கு ஒரு கோடி  மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய் ஊழல் செய்கின்றனர். ஒரு நாளைக்கு பத்துகோடி என்றால் ஆண்டிற்கு  365கோடி மேல் இடத்திற்கு சென்று கொண்டுள்ளது. அதிமுக ஆட்சி கல்வியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் தமிழகத்தில் உயர் கல்வி படிப்பு உள்ள எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Latest Videos

undefined

ஊழலுக்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு

தமிழகத்தில் உயர்கல்வியில் 2030 ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை 2019-20 ஆண்டிலேயே அடைந்துவிட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது ஒரு திட்டமாவது ஏழைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி உள்ளீர்களா என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி,  அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறார்கள் என்று கூறினார். ஊழலுக்காக நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு கொடுக்கலாம், தமிழகத்தில் உள்ள 234 தொகுதி மக்களுக்கான பிரச்சனைகளை எடுத்துக் கூறும் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன், தமிழக முதலமைச்சருக்கு மக்கள் படும் கவலை மற்றும் சோதனை,வேதனை தெரியாத ஒரு மனிதராக உள்ளார்.

ரவுடிக்கும், முதலமைச்சருக்கு என்ன வித்தியாசம்

தமிழகத்தில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஸ்டாலினுக்கு அடையாளம் தெரியாது, 5 அமைச்சர்கள் மட்டுமே சென்று பேசுவார்கள் எனவும் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு காளை வெளியே வரும்போது வர்ணனையாளர்கள் காளையை தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று பேசுவார்கள். அதே போன்று தமிழகம் முதலமைச்சர் சீண்டிபார், தொட்டுப்பார் என்று பேசுகிறார். நாங்கள் திருப்பி அடித்தால் தாங்கமாட்டோம் என்று முதலமைச்சர் கூறுகிறார், ரவுடிக்கும், முதலமைச்சருக்கு என்ன வித்தியாசம் உள்ளது. முதலமைச்சர் இவ்வாறு பேசலாமா?, என்ன பேசவேண்டும் என்பதை பற்றி தெரியாமல், புரியாமல் உள்ள ஒரு பொம்மை முதலமைச்சர் தான் தமிழக முதலமைச்சர் எனவும் விமர்சனம் செய்தார்.

தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின்

கூரை ஏறி கோழி பிடிக்கதாவன், வானம் ஏறி வைகுண்டம் போனான். அதுபோல், தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பிஹார் சென்று சர்வகட்சித் தலைவர்களுடன் சேர்ந்து நாட்டின் பிரதமரை உருவாக்கிறாராம் என விமர்ச்சித்த எடப்பாடி பழனிசாமி, வெயிலுடைய அருமை நிழலுக்கு போனால் தான் தெரியும் அதேபோன்று கஷ்டப்பட்டு இருந்தால் தான்  கிராமத்து மக்களின் நிலை தெரியும்.தமிழகம் முதல்வர் இனியாவது மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும், இரண்டு ஆண்டுகள் போனது போகட்டும் எனவும் கூறினார்.

இதையும் படியுங்கள்

25% மறைமுக மின் கட்டண உயர்வா? எது நடக்கக்கூடாது நினைச்சேனோ அது நடக்க போகுது! அலறும் ராமதாஸ்..!

click me!