கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிங்க;- நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்ட சி.வி. சண்முகம் உடல்நிலை எப்படி உள்ளது? வெளியான தகவல்..!
அவர் தாக்கல் செய்த மனுவில்;- ஓட்டுக்காக எம்.பி. ரவீந்திரநாத் பணம் கொடுத்ததாகவும், தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். ஆகையால், அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இதனிடையே தேர்தல் குறித்து தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு எம்.பி. ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் ரவீந்திராத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
அதை தொடர்ந்து வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்றபோது, மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அதன் பின்னர் இருதரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.
இதையும் படிங்க;- 13 மாதங்கள் ஆச்சு.. எந்த நடவடிக்கையும் இல்லை.. மத்திய உள்துறைக்கு பரபரப்பு கடிதம் எழுதிய ஜெயக்குமார்..!
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக சில விவரங்களை நீதிபதி கோரியிருந்தார். இந்த வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே தங்களது தரப்பு ஆவணங்களை சமர்பிக்க முடியும் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.