அதிமுகவினர் குறித்து பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவினர் குறித்து பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடன் 21 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை அள்ளிச் சென்றார், இந்நிலையில் இருவருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது, ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் மாற்றி மாற்றி நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.
undefined
இது அதிமுகவில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் அதிமுக யாரிடம் இருக்கிறது, கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்ற தெளிவு இல்லாத நிலையில், தற்போதைய சூழல் தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படியுங்கள்:எது தாழ்த்தப்பட்ட சாதி..? அதிர்ச்சியை ஏற்படுத்திய கேள்வி.. வருத்தம் தெரிவித்த பெரியார் பல்கலை.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன்கள், ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதாப் உள்ளிட்ட 18 பேரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மேலும் 21 பேரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக குறித்து முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் பேசியதாக பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் மன்ற முன்னாள் செயலாளர், நாஞ்சில் கோலப்பன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நீக்கப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு:-
1. சுப்புரத்தினம் Ex MLA கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்
2. மாறன் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்
3. சிவில் எம். முருகேசன், கழக இலக்கிய அணி துணைச் செயலாளர்
4. தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய தேவி மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்
5. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வலசை மஞ்சுளா பழனிச்சாமி, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மாவட்ட மகளிரணி செயலாளர்
6. வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி சுரேஷ்பாபு பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றிய கழக செயலாளர்
7. திருநாவுக்கரசு பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர்
8. திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த என் ஜவஹர் (தகப்பனார் பெயர் வெல்லமண்டி நடராஜன்)
9.தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எல் தயாளன் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்.
10. எம் சரவணன் மாவட்ட மாணவரணி செயலாளர்
11. பகலை N.சதீஸ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
12.NRVS செந்தில் கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்
13.MA பாண்டியன் டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளர்
14. விகே. பாலமுருகன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்
15. ஹரி கிருஷ்ணன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்
16. சிவக்குமார் கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர்
17. சுகுமாரன், கும்பகோணம் மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர்
18. பரத் கும்பகோணம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
19. சதீஷ் கும்பகோணம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்
20.MGR சதீஷ் ராஜ் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர்
21. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கே எஸ் கோலப்பன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் செயலாளர் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள், பெட்ரோல் குண்டுடன் வந்தார் ஓபிஎஸ்... பன்னீர் மீது பகீர் புகார்.