ஓபிஎஸ்சை நீக்க இந்த காரணம் ஓகே..எடப்பாடி போட்ட ஸ்கெட்ச் ! மறுபடியுமா?

By Raghupati RFirst Published Jul 5, 2022, 7:18 PM IST
Highlights

வருகின்ற ஜூலை 11ம் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் படுஜோராக நடைபெற்று வருகிறது.

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்து எடப்பாடி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதேபோல, பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவும் உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

அதில், பொருளாளரான ஓ. பன்னீர்செல்வம் கட்சி நிதியை விடுவிக்காததால், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை. கட்சி செலவுக்கான தொகையையும் எடுக்க முடியாத நிலையை ஓபிஎஸ் ஏற்படுத்தியுள்ளார். தனக்கான செல்வாக்கு, நம்பிக்கையை இழந்துவிட்டதால்தான் பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் தடை கோருகிறார். அதிமுக செயல்பாடுகளையும், பொதுக்குழு செயல்பாட்டையும் முடக்கப் பார்க்கிறார். 

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

இந்த செயல்பாட்டை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுச்செயலாளர் ஆகியே  தீருவேன் என்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறார் எடப்பாடி. ஓபிஎஸ் தரப்போ பதவியேற்க விடமாட்டேன் என்று அவரும் ஒருபக்கம் கங்கணம் கட்டி கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

இருவரும் மாறி மாறி மனுவினை நீதிமன்றங்களில் போட்டுகொண்டு இருந்தாலும் எடப்பாடி தரப்பு ஒரு படி முன்னே இருக்கிறது என்று சொல்லலாம்.வருகின்ற ஜூலை 11ம் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. ஓ. பன்னீர் செல்வத்திலும்  பொருளாளர் பதவியை பறித்து அவரை கட்சியின் அடிமட்ட தொண்டராக்கி அதன் பின்னர் கட்சியை விட்டு நீக்கிவிட முடிவெடுத்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

மேலும் செய்திகளுக்கு.. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுக்க போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

மேலும்,  பன்னீர்செல்வம் கட்சியில் கையாடல் செய்துள்ளார் என்றும், பல்வேறு குளறுபடி மற்றும் முறைகேடு நடந்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டி வெளியேற்றலாம் என்றும் முடிவு எடுத்துள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள். கமர்சியல் சினிமாவுக்கு குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஹரி படங்களில் வருவதை போல ட்விஸ்ட் மேல் ட்விட்ஸ்ட் வருவது அதிமுக தொண்டர்களிடம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

click me!