"திமுககாரன் என்றாலே சூடு சுரணை இருக்காது"... கமலாலயத்தின் கதவை தட்டுவார்கள்.. வினோஜ் பி செல்வம் பேச்சு.

By Ezhilarasan Babu  |  First Published Jul 5, 2022, 7:02 PM IST

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனிநாடு கேட்போம் என்கிறார், துணிவிருந்தால் தனிநாடு கேட்டுப் பாருங்களேன் என பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் சவால் விடுத்துள்ளார்


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனிநாடு கேட்போம் என்கிறார், துணிவிருந்தால் தனிநாடு கேட்டுப் பாருங்களேன் என பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் சவால் விடுத்துள்ளார். இந்துக்கள் என்றாலே திருடர்கள் என்றார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்படி என்றால் அவரது கட்சியில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் திருடர்களா என்றும் வினோஜ் பி  செல்வம்  கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக இடையேயான கருத்து மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் தமிழக பாஜக மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒவ்வொரு மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இது ஒருபுறம் உள்ள நிலையில், திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ந்து பாஜக  விமர்சித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்... கொலைவெறி தாக்குதல்!! போலீசில் பரபரப்பு புகார்!!

இதையும் படியுங்கள்: பெண்களுக்கு மாதம் 1000 வாக்குறுதி என்னாச்சு.. திமுகவின் சட்டையை பிடித்து உலுக்கும் வானதி சீனிவாசம்.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர். அதில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக கண்டன உரை ஆற்றினார். அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காவிட்டால் முதலமைச்சர் ஸ்டாலினின் வீடு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது, மெரினா கடற்கரையில் வாக்கிங் செல்பவர்களை கொடூரமாக மிரட்டும் சம்பவங்கள் வாடிக்கையாகி உள்ளது, தமிழகத்தின் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது, காவல்துறை தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார் ஆனால்  சட்டம் ஒழுங்கை அவரால் பாதுகாக்க முடியாத நிலையே உள்ளது. ஸ்டாலினிடம் நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன், தமிழ்நாடு காவல் துறைக்கு அண்ணாமலை வைத்து பயிற்சி தர சொல்ல வேண்டும்.

திமுக எம்பி ராசா தனிநாடு கேட்போம் என்கிறார், துணிவிருந்தால் தனிநாடு கேட்டுப் பாருங்களேன்.. அடைந்தால் தனிநாடு என்று பேசியவர்கள் எல்லாம் சுடுகாட்டுக்குப் போய் விட்டார்கள். தனிநாடு கேட்பேன் என பேசும் ஆ.ராசா மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறையை விட்டுவிட்டு தினந்தோறும் உதயநிதி பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு நாளாவது உதயநிதியின் சகோதரி நடத்தும் பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கு கல்வித் தரம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டின் உண்மையான எதிர்க் கட்சியாக பாஜக மாறிவிட்டது, கடந்த எட்டு ஆண்டுகளில் தினந்தோறும் செய்தித்தாள்களில் பாஜக-வின் சாதனைகளே வந்து கொண்டிருக்கிறது, கருணாநிதி முதலமைச்சரான பின்புதான் கோவில்களில் சிலைகள் திருடு போனது. ஆனால் அச்சிலைகளை மீட்டு தருபவர் தான் மோடி, தேசியமும் ஆன்மீகமும் சேர்ந்து ஒரே கட்சி பாஜகதான். இந்து என்றால் திருடன் என்று கருணாநிதி கூறினார். பிரமாணப் பத்திரத்தில் திமுக அமைச்சர்கள் அனைவரும் இந்துக்கள் என பதிவு செய்திருக்கிறார்கள் அப்படி என்றால் அவர்கள் திருடர்களா?

2026 வரை நேரம் இருக்கிறது என திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது, மகாராஷ்டிராவை போல விரைவில் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாறும். திமுக காரன் என்றாலே சூடு சொரணை இருக்காது, திமுக காரனுக்கு சூடு சொரணை வரும்போது நிச்சயம் அக்கட்சியில் புரட்சி வெடிக்கும். அப்போது அனைவரும் கமலாலயத்தில் தேடி வருவார்கள். இவ்வாறு வினோஜ் பி செல்வம் பேசினார்.
 

click me!