ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி

By Raghupati RFirst Published Jul 8, 2022, 3:06 PM IST
Highlights

அதிமுகவின்  அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதன் எதிரொலியாக அங்கிருந்து வெளியேறினார் மருது அழகுராஜ்.

அதிமுக பொதுக்குழு

கடந்த 23 ஆம் தேதி புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பரபரப்புக்கு இடையே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் வரும் ஜூலை 11ம் தேதி, பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி யை தேர்வு செய்யப்படவுள்ளார். இதனை சட்டப்படி எதிர்கொள்ள ஓபிஎஸ் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் உள்ள 2665 பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களில் 2432 பேர் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த பொதுக்குழு வில் இபிஎஸ் க்கு ஆதரவாகவும், தீர்மானங்களை நிராகரிப்பதாகவும் கையெழுத்திட்டிருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த வாரம் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்தனர். நிர்வாகிகள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி பக்கம் அதிகரித்து வருகிறது. ஓபிஎஸ் தரப்பு மற்றொரு பக்கம் நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. 

மருது அழகுராஜ்

அதிமுகவின்  அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதன் எதிரொலியாக அங்கிருந்து வெளியேறினார் மருது அழகுராஜ். பிறகு, ‘நாளேடு அதிமுகவின் நாளேடு இல்லை. எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் நடத்தும் நாளேடு இது. விளம்பர வருமானங்கள் கட்சிக்குச் செல்வதில்லை’ என்று குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பினார் மருது அழகுராஜ்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதில் பேசிய மருது அழகுராஜ், ‘நான்கைந்து  மாதங்களுக்கு முன்பாகவே எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ்சை ஓரங்கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.  முதலில் விளம்பரத்தில் தான் கை வைத்தார்கள். விளம்பரங்களில் ஓபிஎஸ் இருந்த இடத்தில் இபிஎஸ்யும், இபிஎஸ் இருந்த இடத்தில் ஓபிஎஸ்ஐயும் மாற்றினார்கள்.

மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

இபிஎஸ் Vs ஓபிஎஸ் 

நமது அம்மா நாளிதழில் ஓபிஎஸ் பற்றிய செய்திகளை முதலில் குறைத்தார்கள் .  கொஞ்சம் கொஞ்சமாக வந்து நாளிதழில் நிறுவனர் என்று இடத்தில் இருந்த ஓபிஎஸ் பெயரையே தூக்கினார்கள். இதற்கு மேலும் அங்கே இருக்கக் கூடாது என்று தான் நான் நமது அம்மாவின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகி வந்து விட்டேன்.பொதுக்குழு என்கிற பெயரில் நடத்தப்பட்டது சதிக்குழு ஆகும்.  

அந்த கெட்ட வார்த்தை

ஒரு முன்னாள் முதல்வர் மூன்று முறை செங்கோல் பிடித்தவரை அவரின் தாயைச் சொல்லி தே*** மகனே என்று சொல்லி திட்டினார்கள். நான் காது கொடுத்து கேட்டேன். அப்போது நான் செய்தி தொடர்பாளர்கள் வரிசையில் இருந்தேன். நடப்பதை கண்டு பொறுக்க முடியாமல் அப்போதே நான் வெளிநடப்பு செய்து விட்டேன். பகுதி செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள்.  

ஆனால் அவர்கள் ஒருவர் கூட ஓபிஎஸ்ஐ திட்டவில்லை. அவர்களுக்கு பின்னால் அமர்த்தப்பட்டு இருந்த ஒரு கூட்டம் தான் ஓபிஎஸ்ஐ அவமானப்படுத்தியது.   ஜேசிடி பிரபாகர்  வந்தபோது சொல்ல கூசுகின்ற வார்த்தைகளில் அவரை   திட்டினார்கள்.அடுத்ததாக வைத்தியலிங்கம் வந்தபோது மிக ஆவேச கூச்சல் போட்டார்கள்.ஓபிஎஸ் வந்தபோது அதை விடவும் அதிகமாக கூச்சல் போட்டார்கள். எடப்பாடி இதை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. அதை ஏற்றுக்கொண்டு, ரசித்து, ஆமோதித்து, விரும்பினார்’ என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் மருது அழகுராஜ். 

மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை

click me!