இளையராஜா எம்.பி ஆகலாம் ஆனால் தாமரை மலராது தம்பி.. பாஜகவினரை வெறுப்பேற்றும் கே.ராஜன்.

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2022, 2:41 PM IST
Highlights

இளையராஜா எம்பியாகலாம் ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது என அரசியல் விமர்சகரும், சினிமா தயாரிப்பாளருமான கே.ராஜன் கூறியுள்ளார். எம்.பி ஆகும் இளையராஜா தமிழகத்திற்காகவும், அல்லது சினிமாத்துறைக்காகவும் என்ன செய்யப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

இளையராஜா எம்பியாகலாம் ஆனால் தமிழகத்தில் தாமரை மலராது என அரசியல் விமர்சகரும், சினிமா தயாரிப்பாளருமான கே.ராஜன் கூறியுள்ளார். எம்.பி ஆகும் இளையராஜா தமிழகத்திற்காகவும், அல்லது சினிமாத்துறைக்காகவும் என்ன செய்யப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இளையராஜாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

உலக தலைவராக மதிக்கப்படுபவரும், இந்தியாவின் சட்ட மேதையான அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடலாமா? என்றும் தனது சுயநலத்திற்காக எதையோ எதிர்பார்த்து இளையராஜா இப்படி பேசி வருகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் அவர்  தெரிவித்த கருத்து அவரது சொந்த கருத்து அல்ல, அது யாரோ ஒருவர் எழுதி கொடுத்த கருத்து என்றும் இளையராஜா விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜக அரசு அவருக்கு எம்பி பதவி வழங்கியுள்ளது. இது இளையராஜா ரசிகர்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இளையராஜா எம்.பியானது குறித்து கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்கமாட்டார்..! பலருக்கும் அடி விழ போகுது...இபிஎஸ் அணியை எச்சரிக்கும் புகழேந்தி

அதே நேரத்தில்  இளையராஜாவை மோடியை புகழ்ந்து பாராட்டி பேசியதற்கு கிடைத்த சன்மானம் தான் இந்த எம்பி பதவி என்றும் இப்படி எல்லாம்பேசி ஒரு பதவியை அவர் பெறவேண்டுமா? இளையராஜாவின் மீது இருந்த நன்மதிப்பு போய்விட்டது என்றும் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் சினிமா தயாரிப்பாளரும் அரசியல் விமர்சகர்களில் ஒருவருமான கே. ராஜன் இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ளனர். இதுதொடர்பாக  தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- 

இதையும் படியுங்கள்: மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கஸ்டமர் போல் வந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி, அதற்கு இளையராஜாவுக்கு பாராட்டுக்கள். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு கொண்டாடப்படுகிறார்கள் என்பதற்கு இது உதாரணம். இசையை திரை உலகத்தில் உயர்த்தியவர் இளையராஜா அதில் எந்தவித மாறுபாடும் கிடையாது. ஆனால் இந்த பதவியை வைத்துக்கொண்டு இளையராஜா என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை.

இதேபோல பாஜகவில் ஒருமுறை 'சோ'வுக்கு  எம்பி பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் எதையுமே செய்யவில்லை, அதுபோல திரையுலகில் இசையால் சாதித்தவர் என இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர் அங்கு போவாரா? அங்கு மக்கள் பிரச்சினையை பற்றி பேசுவாரா? அல்லது திரைத்துறைக்கு என்ன செய்யப் போகிறார் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

இதுகுறித்து நான் ஏற்கனவே சொன்னேன், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பாராட்டிய போது பலரும் அவரை விமர்சித்தனர், நான் அப்போதே சொன்னேன் இளையராஜாவுக்கு இதுகுறித்து ஒரு பரிசு தரப் போகிறார்கள் என்று, அந்த பரிசு தான் இது. மொத்தத்தில் அம்பேத்கரை அவமானப் படுத்தியதால் இளையராஜாவுக்கு இந்த பரிசு கிடைத்திருக்கிறது, ஏனென்றால் மோடி இந்த நாட்டுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஏழைகள் இன்னும் ஏழைகளாக சென்று கொண்டிருக்கிறார்கள், அதேபோல் இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுத்தால் தலித் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என பாஜக நினைக்க கூடாது, ஏனென்றால் இது வரை தலித் மக்களுக்காக இளையராஜா ஒரு பத்து பைசாகூட செலவு செய்தவர் அல்ல. அவர் இதுவரை எந்த பட்டியலினத்து மக்களுடனும் சேர்ந்தவர் அல்ல, எனவே இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுக்கலாம், அதனால் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்க கூடாது என அவர் கூறியுள்ளார். 
 

click me!