எதிர்கட்சியின் முக்கிய நிர்வாகியின் உயிருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.! அலறும் எடப்பாடி பழனிசாமி

By Ajmal KhanFirst Published Mar 28, 2023, 11:03 AM IST
Highlights

சென்னையில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்கட்சி நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக நிர்வாகி கொலை

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி செயலாளராக இருந்து வந்தார். கஞ்சா போதையில் தனது வீட்டின் அருகே சுற்றித்திரிந்த நபர்களை இளங்கோவன் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பத்தில் தொடர்புடைய  5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சஞ்சய்,கணேசன், வெங்கடேசன், அருண்குமார் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஒரு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

அதிர்ச்சியில் எடப்பாடி

இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், பெரம்பூர் தெற்கு பகுதிக் கழகச் செயலாளர் திரு. வியாசை M. இளங்கோவன் அவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.  இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு துடிப்புடன் பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. வியாசை இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

எதிர்கட்சி நிர்வாகிக்கு பாதுகாப்பு இல்லை

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில், அஇஅதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி கழக செயலாளர்,திரு.இளங்கோ அவர்கள் சமுக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்,பிரதான எதிர்கட்சியில் முக்கிய பங்காற்ற கூடிய நிர்வாகிக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை நம் மாநிலத்தில் நிலவவுது பெரும் கண்டனத்துக்குரியது, சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு இருப்பது வெட்ககேடு,அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன்,இந்த நாசகார செயலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

சென்னையில் பயங்கரம்.. அதிமுக பகுதி செயலாளரை விரட்டி விரட்டி கொலை செய்த மர்ம கும்பல்.. இதுதான் காரணமா?

click me!