"ஜெ.வின் கனவுகளில் ஒன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி" - திறப்பு விழாவில் எடப்பாடி உருக்கம்

First Published Jun 9, 2017, 2:25 PM IST
Highlights
edappadi palanisamy speech in medical college inauguration


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை,எளிய மக்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற பல அரசு மருத்துவமனைகளை உருவாக்கினார் என்றும்,அவரது கனவுகளில் ஒன்றான புதுக்கோட்டை அரசு மருத்துக் கல்லூரியை திறந்து வைப்பதில் மிகுந்த பெருமையடைவதாக முதலமைச்சர் எடப்பாடி உருக்கமுடன் பேசினார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், புதுக்கோட்டையில் 231 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியில் கீழ் அறிவித்து செயல்படுத்தப்பட்ட திட்டம்தான் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மன்றும் மருத்துவமனை என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் 22 ஆவது மரசு மருத்துமனை இது என்றும் 200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை நவீன உபகரணங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஓராண்டில் மட்டும் 212 ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மேலும் கூடுதலாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் J.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

click me!