அதிமுகவில் விரைவில் தேர்தல்..பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி - ஓபிஎஸ் அதிர்ச்சி !

Published : Jul 26, 2022, 08:23 PM IST
அதிமுகவில் விரைவில் தேர்தல்..பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி - ஓபிஎஸ் அதிர்ச்சி !

சுருக்கம்

அதிமுகவின் தற்கால பொதுச் செயலாளராக  எடப்பாடி பழனிச்சாமி  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக சார்பில், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், ‘ ஒரு பெருந்திரளான கூட்டத்தை, தெற்கு மாவட்டத்தில் கூடுமா, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமா  என்று கேட்டவர்கள் எல்லாம் மூக்கிலே கை வைத்து கொண்டு உள்ளார்கள். 

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவில் அந்த 4 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி !

தஞ்சை மாவட்டம் யாருக்கும் தனிப்பட்ட ஒருவருக்காக அல்ல. அ.தி.மு.க என்பது தொண்டர்களுக்கான இயக்கம். இதில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம், ஒரு நாள் காமராஜ் கூட தலைமை ஏற்கலாம். இது தொண்டர்கள் வளர்த்த இயக்கம்.  தற்போது தற்கால பொதுச் செயலாளராக  எடப்பாடி பழனிச்சாமி  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பின்னர் தொண்டர்களுக்கான  தேர்தல்  அறிவிக்கப்பட்டு, தேர்தல் மூலம் தொண்டர்கள் தேர்வு செய்கிற பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார். 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

அதிமுகவை பொறுத்தவரை யாரை நம்பியும்  இந்த இயக்கம் இல்லை, தொண்டர்களை நம்பி  உள்ளது. தொண்டர்கள் பெரும் பகுதி 100% தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கிறார்கள். எடப்பாடி பின்னால் எப்போதும் அதிமுக இருக்கும். பயிர் காப்பீடு செய்வதற்கு எந்த  இன்சூரன்ஸ் கம்பெனி என்று தெரியவில்லை. அதனால் உடனடியாக எந்த இன்சூரன்ஸ் கம்பெனி என்பதை அறிவித்து, ப்ரீயம் செலுத்துவதற்கான  தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!