கோவையில் ஓ.பி.எஸ்க்கு சிகிச்சை... சென்னை அப்போலோ மருத்துவமனையில் எடப்பாடி..!

Published : Jun 19, 2019, 12:43 PM IST
கோவையில் ஓ.பி.எஸ்க்கு சிகிச்சை... சென்னை அப்போலோ மருத்துவமனையில் எடப்பாடி..!

சுருக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது உடல் பரிசோதனைக்காக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு சாதாரண பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.  

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடத்த இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது உடல் பரிசோதனைக்காக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு சாதாரண பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. இதையடுத்து குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் காணொலிக் காட்சி மூலம் நடத்துவதாக இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறைந்த காலத்தில் 3வது முறையாக திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நல பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் திமுகவினர் சோகமடைந்துள்ளனர். எடப்பாடியார். ரத்தம், யூரின், ப்ரஷர், ஈசிஜி.உள்ளிட்ட செக்கப் செய்யப்பட்டுள்ளது.

அனைத்தும் நார்மல் நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் கூறுகிறது. முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக கோவை சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அங்கே இயற்கை நல மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி இந்த சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார் என செய்திகள் வெளியாகின.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வழக்கமான சிகிச்சைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஒரே நாளில் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பகுதி சற்று பரபரப்புடன் காணப்படுகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

ஒரு கிறிஸ்தவர் ஓட்டு கூட விஜய்க்கு போகக்கூடாது..! நெல்லையில் பக்கா ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் திமுக..!
வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி