விஷாலுக்கு ஆப்பு... தேர்தலை நிறுத்தி எடப்பாடி அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Jun 19, 2019, 12:27 PM IST
Highlights
23ம் தேதி நடைஒபெற இருந்த நடிகர் சங்கத்தேர்தலை நிறுத்த தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். 

 

23ம் தேதி நடைஒபெற இருந்த நடிகர் சங்கத்தேர்தலை நிறுத்த தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். 

44 தொழில் முறை உறுப்பினர்களை தொழில் முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றிய காரணத்தால் இந்தத் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர்கள் கடந்த முறை வாக்களித்தவர்கள். அவர்களை தகுதி நீக்கம் செய்து இம்முறை வாக்களிக்க விடாமல் அவர்களின் உறுப்பினர் பதவிகளை எந்தவித முகாமும் இல்லாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் மாவட்டப்பதிவாளர் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் சங்க தேர்தலில் பாணடவர் அணி சார்பாக விஷால், பூச்சி முருகன், நாசர், கருணாஸ் ஆகியோரும், சங்கரதாஸ் சுவாமிகள் அணி சார்பாக பாக்கியராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக எம்.ஜி.,ஆர் -ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் ஓ.எம்.ஆர் பகுதியிலோ அல்லது சென்னை நகரை தாண்டியோ தேர்தலை நடத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று 11.30 மணியளவில் விஷால், கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்து திரும்பினர். அவர் திரும்பிய 40 நிமிடங்களில் தேர்தல் நிறுத்தப்படுவதாக மாவட்ட பதிவாளர் அறிவித்துள்ளார். 

இந்தத் தேர்தலில் திமுக விஷால் அணிக்கும், அதிமுக பாக்கியராஜ் அணிக்கும் ஆதரவாக பின்னால் இருந்து செயல்பட்டு வந்தது. பூச்சி முருகன் திமுகவின் தீவிர விசுவாசி. விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த போதே அதிமுகவின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டவர். ஆகையால், இந்தத் தேர்தலை நிறுத்தியதில் முதல்வர் எடப்பாடியாரின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. 

click me!