இப்படிப்பட்டவரா ஓம்பிர்லா..? மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஆஹா ஓஹோ பாராட்டு..!

Published : Jun 19, 2019, 11:56 AM IST
இப்படிப்பட்டவரா ஓம்பிர்லா..? மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஆஹா ஓஹோ பாராட்டு..!

சுருக்கம்

மக்களவை சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் ஓம் பிர்லா. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் போட்டியிட்டு வெட்டி பெற்ற ஓம் பிர்லா மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.   

மக்களவை சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் ஓம் பிர்லா. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓம் பிர்லா மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். 

ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுத்து பிரதமர் உட்பட 12 உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். பிரதமரும் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் சவுத்ரியும் திமுக தலைவர் டி ஆர் பாலு உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது,  

கோட்டா தொகுதியில் யாரும் பட்டினியால் வாட கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் ஓம் பிர்லா.. மிகவும் எளிமையான ஆடம்பரமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.. கோட்டாவில் கல்வி நிலையங்கள் நிறைந்தவையாக இருக்க காரணம் ஓம் பிர்லா தான்.. குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சீரமைப்பு பணியில் ஈடுபட்டவர் ஓம்பிரலா. 

மக்கள் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்... பாஜக ஊழியராக நீண்டகாலம் உழைத்தவர் என ஓம் பிர்லாவை பிரதமர் மோடி ஆஹா ஒஹோ என புகழ்ந்து தள்ளினார். 

PREV
click me!

Recommended Stories

தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!