Tamilnadu Floods: பொய் சொல்வதற்காகவே பிறந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. டென்ஷனான ஸ்டாலின்.

Published : Nov 10, 2021, 12:15 PM ISTUpdated : Nov 10, 2021, 12:19 PM IST
Tamilnadu Floods: பொய் சொல்வதற்காகவே பிறந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. டென்ஷனான ஸ்டாலின்.

சுருக்கம்

மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்படாத தொடர்நது கூறிவந்தனர் ஆனால் அத்துறையின் அமைச்சர் அதில் சொல்ல முடியாத அளவிற்கு கொள்ளை அடித்திருக்கிறார். கடந்த மழையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம் என்று அவர்கள் தெரிவித்தி வந்ததுடன், எல்லாவற்றையும் சீரமைத்து இருப்பதாக கூறினர் ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கைகளையும் அவர் எடுத்ததாக தெரியவில்லை, 

பெரிய தோல்வியை சந்தித்துள்ள வெருப்பில், திமுக இவ்வளவு சிறப்பாக வேலை செய்கிறதே என்ற கடுப்பில், எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு மீது பொய்களைக் கூறி வருகிறார் என்றும், எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்லவே பிறந்து இருக்கிறார் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திடீரென வந்து மக்கள் மத்தியில் வந்து அவர் ஷோ காண்பிக்கிறார் என்றும், இப்படி செய்வது அவரது வாடிக்கைதான் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், அது குறித்து திமுக கவலைப்படவில்லை என்றும், தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இரவு பகலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி இருக்கிறது, குறிப்பாக வடசென்னையில்  குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக கால்வாய்களை தூர்வாராததே வெள்ளத்துக்கு காரணம் என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தொடந்து வழங்கப்பட்டு வருகிறது, தொடர்ந்து அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கவும் முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் திமுக அரசு மக்களை முன்னெச்சரிக்கை செய்ய தவறிவிட்டது என்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டுவிட்டது  என்றும், பல்வேறு இடங்களில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வருகிறது என்றும், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பல்வேறு பகுதிகளுக்கு ஆட்சியாளர்கள் எட்டி கூட பார்க்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.ஆனால் மழை வெள்ளத்தில் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். அந்தவகையில் சென்னை தியாகராயநகர் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி என விளம்பரப்படுத்திக் கொண்ட திட்டத்தில் பெரிய அளவில் கொள்ளை நடந்துள்ளது, 

மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்படாத தொடர்நது கூறிவந்தனர் ஆனால் அத்துறையின் அமைச்சர் அதில் சொல்ல முடியாத அளவிற்கு கொள்ளை அடித்திருக்கிறார். கடந்த மழையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம் என்று அவர்கள் தெரிவித்தி வந்ததுடன், எல்லாவற்றையும் சீரமைத்து இருப்பதாக கூறினர் ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கைகளையும் அவர் எடுத்ததாக தெரியவில்லை, ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த ஆறு மாத காலத்தில் 721 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்களை தூர்வாரி இருக்கிறோம், ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் மழை பெய்து பத்து பதினைந்து நாட்களுக்கு மேலாக தேங்கி கிடைத்தது, ஆனால் இப்போது நேற்று தேங்கிய தண்ணீர் மழை விட்ட நேரத்தில் வெளியேறிவிட்டது. ஆனால் மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில்,தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது அதையும் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தமாக 560 மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அது மட்டும் இல்லை, அம்மா உணவகங்களில் மழை காலம் முடியும் வரை இலவசமாக உணவு வழங்க ஆணை பிறப்பித்திருக்கிறேன், அதேபோல மாநகராட்சி அலுவலகத்தில் 3 வேளைக்கும் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதையும் மனதில் வைத்துக்கொண்டு மூன்றாவது நாளாக நானே முதலமைச்சர் என்ற முறையில் களத்தில் இறங்கி பணிகளை துரிதப்படுத்தி வருகிறேன். 

அமைச்சர் பெருமக்கள் மற்ற மாவட்டங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளில் தாமதம் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவர் பொய் சொல்வதற்காகவே பிறந்திருக்கிறார். இப்படித்தான் தேர்தல் நேரத்திலும் பொய்களை கூறினார், பொதுத் தேர்தல் முடிந்த பிறகு தேர்தலில் படுதோல்வி அடைந்த வெறுப்பில், திமுகவினர் இவ்வளவு வேகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களே என்ற கடுப்பில் அவர் இவ்வாறு பொய்களைக் கூறிக் கொண்டிருக்கிறார். அவர் திடீரென வந்து ஷோ காட்டுகிறார். அவர் அப்படித்தான் செய்வார் அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. மக்களுடைய பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், அதேபோல ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், நிச்சயமாக, உறுதியாக அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?
ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!