அடப்பாவிகளா.. 50 ஆண்டு அதிமுக வரலாறு, ஐந்தே ஆண்டில் ஸ்வாகா.. SP.வேலுமணி மீது அதிமுக முன்னாள் நிர்வாகி பகீர்.!

By vinoth kumarFirst Published Nov 10, 2021, 11:50 AM IST
Highlights

சென்னையின் தற்போதைய நிலைக்கு எஸ்.பி.வேலுமணியின் ஊழல், அதிகமான இயற்கை சீற்றம், மக்களின் ஒத்துழைப்பின்மை ஆகியவை 3 பிரிவுகளின் கீழ் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்  என்பதற்கு 79.8 சதவீதம் பேரும்,  12.1 சதவீதம் மக்களின் ஒத்துழைப்பின்மை என்றும், 8.1 சதவீதம் பேரும், அதிகமான இயற்கை சீற்றம் என்றும் வாக்களித்திருந்தனர்.

அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 5000 கோடி ரூபாயும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. தியாகராயர் நகர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம்.. மன்னிப்பு கேளுங்கள்.. அண்ணாமலை ஆவேசம்..!

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-தியாகராயர் நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளனர். முறையாக எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசிடமிருந்து திட்டத்திற்காக நிதி பெற்றும் பணிகள் நடைபெறவில்லை. எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் துறை என்ன செய்தது என்பது பற்றியும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே, அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்;- வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினர். அதில், 2015ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்திற்கு பிறகு சுமார் 5000 கோடி ரூபாய் தமிழக அரசால் மழை நீர் வடிகால் திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இதற்கு பின்னவரும் சென்னை மாவட்டங்களின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

சென்னையின் தற்போதைய நிலைக்கு எஸ்.பி.வேலுமணியின் ஊழல், அதிகமான இயற்கை சீற்றம், மக்களின் ஒத்துழைப்பின்மை ஆகியவை 3 பிரிவுகளின் கீழ் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்  என்பதற்கு 79.8 சதவீதம் பேரும்,  12.1 சதவீதம் மக்களின் ஒத்துழைப்பின்மை என்றும், 8.1 சதவீதம் பேரும், அதிகமான இயற்கை சீற்றம் என்றும் வாக்களித்திருந்தனர். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்  என்பது முதலிடத்தில் உள்ளது. 

இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல முன்னாள் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் The nation wants to know என்று தெரிவித்துள்ளார். 

மற்றொரு டுவிட்டர் பதிவில்;- பாதாள சாக்டை திட்டத்தில்  ரூ 5 ஆயிரம் கோடி ஸ்வாகா.....
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000கோடி ஸ்வாகா...
குடிமராமத்து பணிகளில் பல ஆயிரம்  கோடி ஸ்வாகா..
அடப்பாவிகளா... 
50 ஆண்டு அதிமுக வரலாறு, ஐந்தே ஆண்டில் ஸ்வாகா ….….
ஊரே சும்மா மெதக்குதுல்ல? என்று தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் ஐடிவிங் தலைவராக  மறைந்த ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் அஸ்பையர் சுவாமிநாதன். இவர்  பல ஆண்டுகாலம் அதிமுகவுக்காக பணியாற்றியவர். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததும், அதிமுக தலைமை மீது குற்றம் சாட்டிவிட்டு, கட்சியில் இருந்து விலகியவர். ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக இருந்தவர் அஸ்பையர் சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!