பள்ளி வகுப்பறையில் 12-ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: காகிதத்தை கிழித்து மலர் தூவி வாழ்த்து..

Published : Nov 10, 2021, 09:44 AM ISTUpdated : Nov 10, 2021, 09:46 AM IST
பள்ளி வகுப்பறையில் 12-ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: காகிதத்தை கிழித்து மலர் தூவி வாழ்த்து..

சுருக்கம்

இந்நிலையில் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி களியக்காவிளை அடுத்த பளுகல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு தாலி கட்டிய போட்டோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிக்கு , மாணவன் தாலி கட்டிய போட்டோ இணையத்தில் வெளியாகி அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளதால் முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி களியக்காவிளை அடுத்த பளுகல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு தாலி கட்டிய போட்டோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் கடந்த 2-ம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியை திருமணம் செய்த மாணவனுக்கு சக மாணவ மாணவிகள் காகிதங்களை கிழித்து மலர்களை போலத் தூவி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை உடனிருந்த மாணவர் செல்போனில் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது குமரி முழுவதும் இந்த போட்டோ வைரலானதை தொடர்ந்து, மாணவியின் தந்தை ஜஸ்டின் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து போலுசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டும் சம்பவம் இது முதன்முறையல்ல. பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!