இந்தியாவை ஆள தகுதி படைத்த ஒரே நபர் மோடி தான்... அதிரடி காட்டும் எடப்பாடி..!

Published : Mar 06, 2019, 06:17 PM IST
இந்தியாவை ஆள தகுதி படைத்த ஒரே நபர் மோடி தான்... அதிரடி காட்டும் எடப்பாடி..!

சுருக்கம்

பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாராம் சூட்டியுள்ளார்.

பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாராம் சூட்டியுள்ளார். 

சென்னை கிளாம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் 130 கோடி மக்கள் வசிக்கும் ஜனநாயக நாட்டை ஆளும் தகுதி பெற்றவர் பிரதமர் மோடி. நாம் இங்கு பத்திரமாக. நிம்மதியாக வாழ, மத்தியில் வலிமையான பிரதமர் இருப்பதே காரணம். இந்தியா முழுவதும் தேடி தேடி பார்த்த போதும், பிரதமர் மோடி தான் கண்ணுக்கு தெரிகிறார். நாட்டின் பாதுகாப்பை வழிநடத்தி செல்லும் தகுதி மோடிக்கு தான் உண்டு.

 

5 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு சென்று, நமது நாட்டின் பெருமையை வெளிப்படுத்தினார். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது நமது ராணுவத்திற்கு ஆதரவாக உலக நாடுகள் குரல் கொடுத்தன. இதற்கு பிரதமர் மோடி இரவு பகலாக உழைத்ததே காரணம். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அபிநந்தனை விரைவாக மீட்டவர் பிரதமர் மோடி என புகழ்ந்துள்ளார். 

தமிழக அரசு, ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கியதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியில், தமிழகத்திற்கு எந்த நலமும் கிடைக்கவில்லை. பாரதம் வளம் கொழிக்கும் பூமியாக வேண்டுமானால், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். நமது கூட்டணி இயற்கையான கூட்டணி. பிரதமரை மீண்டும் தேர்வு செய்ய உழைப்போம் என கூறி உரையை நிறைவு செய்தார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!