தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில், திமுக - 16, அதிமுக - 13, காங்கிரஸ் ஒன்றில் வெற்றி பெற்றது. தற்போது நகரமன்ற தலைவராக திமுகவை சேர்ந்த டி.எம்.எஸ்.பாஷா இருந்து வருகிறது.
எடப்பாடி நகராட்சியின் 8வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வி சக்திவேல், அக்கட்சியிலிருந்து விலகி சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில், திமுக - 16, அதிமுக - 13, காங்கிரஸ் ஒன்றில் வெற்றி பெற்றது. தற்போது நகரமன்ற தலைவராக திமுகவை சேர்ந்த டி.எம்.எஸ்.பாஷா இருந்து வருகிறது.
undefined
இதையும் படிங்க;- தமிழகத்தில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதா.? முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு தகவல்
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியின் 8வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வி சக்திவேல் எடப்பாடி நகராட்சியின் நகர்மன்ற தலைவர் பாஷா இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க;- அதிமுக முன்னாள் எம்.பி.யை தட்டித்தூக்கிய பாஜக.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!
திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர் செல்வி சக்திவேலுக்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார். அப்போது நகர்மன்ற தலைவர் பாஷா உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் இருந்து அதிமுக கவுன்சிலர் திமுகவில் தாவிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.