கரை சேர முடியாமல் நட்டாற்றில் தத்தளித்த அதிமுகவை காப்பாற்றியது நாங்கல்தான்.. செல்லூர் ராஜூவுக்கு பாஜக பதிலடி.!

By vinoth kumar  |  First Published Jun 10, 2023, 6:58 AM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது போல். தேர்தலில் அவர்கள் தயவில் நாங்கள் வெற்றி பெற போவதில்லை. எங்களுடன் பயணித்தால் மட்டுமே அவர்களால் கரைசேர முடியும். இல்லாவிட்டால் நட்டாற்றில் போக வேண்டிய பரிதாபம் அவர்களுக்கு ஏற்படும் என தெரிவித்திருந்தார். 


அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. அதிகார மோதல்களால் பல பிரிவாக பிரிந்துள்ளது. இந்நிலையில், 2019ம் ஆண்டு  பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக ஆட்சி அதிகாரத்தை இழந்தது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- முருகனுக்கு 2 மனைவியா? 3 மனைவியா? அமைச்சரின் பேச்சுக்கு கருணாநிதியை சுட்டிக்காட்டி தரமான பதிலடி கொடுத்த பாஜக

இந்நிலையில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த கூட்டணிக்குள் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜகவினர் அதிமுகவினரையும், அதிமுகவினர் பாஜகவினரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அண்ணாமலையோ அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவேன் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை முதிர்ச்சியற்று செயல்படுகிறார். தன்னையே முன்னிலைப்படுத்த வேண்டும் என பேசி வருகிறார். எனவே அவரைப்பற்றி எதையும் என்னிடம் கேட்காதீர்கள் என காட்டமாக கூறினார். இதனையடுத்து இரு தரப்பையும் டெல்லிக்கு அழைத்து அமித்ஷா சமரசம் பேசினார். இதனால், பாஜக அதிமுக இடையே வார்த்தை போர் சற்று ஓய்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ;- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது போல். தேர்தலில் அவர்கள் தயவில் நாங்கள் வெற்றி பெற போவதில்லை. எங்களுடன் பயணித்தால் மட்டுமே அவர்களால் கரைசேர முடியும். இல்லாவிட்டால் நட்டாற்றில் போக வேண்டிய பரிதாபம் அவர்களுக்கு ஏற்படும் என தெரிவித்திருந்தார். செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தான் திராவிட மாடலா.? திமுக அரசை விளாசும் செல்லூர் ராஜூ

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கரை சேர முடியாமல், பரிதாபமாக நட்டாற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை நங்கூரமிட்டு பாதுகாத்த வரலாற்றை மறந்து விட்டு தானாகவே கரை சேர்ந்ததாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள், 'இனி நங்கூரம் தேவையில்லை' என்ற அலட்சியப்படுத்தும் போக்கு தான் பரிதாபத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

click me!