பள்ளி மாணவர்கள் கனவை சிதைத்த திமுக.. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே பொறுப்பு - அண்ணாமலை அதிரடி

By Raghupati R  |  First Published Jun 10, 2023, 12:35 AM IST

பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா ? பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.


டெல்லியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அணி சார்பில் வீரர்களை தேர்வு செய்து அனுப்பாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை தமிழக மாணவர்களைப் புறக்கணித்தது குறித்து, கடந்த ஐந்தாம் தேதி அன்று கேள்வி எழுப்பியிருந்தோம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

அது குறித்து ஊடகங்களில் செய்தியாக வந்தும், தமிழக பாஜக சார்பாக தமிழக அரசுக்கு இதுகுறித்து மீண்டும் நினைவூட்டிய பிறகும், இத்தனை நாட்களும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டு, இன்று, முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து, தான் பணியில் இழைத்த தவறை மறைக்கப் பார்க்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பொறுப்பின்மையை மறைக்க, அரசு அதிகாரிகளைப் பலிகடாவாக்கி, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா ? பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

இதையும் படிங்க..பொறுத்தது போதும்.. 2024 தேர்தல் பாஜகவுக்கு பாடமாக இருக்க வேண்டும் - திமுகவினருக்கு உத்தரவு போட்ட ஸ்டாலின்

click me!