
தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம், அதற்காக உதயநிதியை இப்போதே களத்தில் குதிக்க வைக்க பக்கா ப்ளான் போட்டு வருகிறார் செயல் தல. இந்த தகவல் திமுக நிர்வாகிகளுக்கு முன்பாக எடப்பாடிக்குப் போயிருக்கிறது. அவரும் உடனடியாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜை அவசர அவசரமாக வரவழைத்துள்ளார். அப்போது அவரிடம் ‘திருவாரூர்ல அவங்க உதயநிதியை நிறுத்த ரெடி பண்றாங்க. நாமும் அங்கே வலுவான ஆளைக் களமிறக்கணும். அதுக்கு யாரு இருக்காங்கன்னு நீங்க ஒரு லிஸ்ட் தயார் பண்ணுங்க. ஒரு தொகுதின்னு அலட்சியமாக இருக்க வேண்டாம்.
ஸ்டாலின், உதயநிதி, திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் என எல்லா லிஸ்டையும் கையில் வெச்சுகிட்டு, அங்கே நாமும் வலுவான முகம் தெரிஞ்ச ஆளை நிறுத்தணும். அதுக்கு நான் ரெடி பண்ண சொல்றேன். நீங்க திருவாரூரை மட்டும் கவனிங்க’ என்று சொல்லியிருக்கிறார். காமராஜும் திருவாரூருக்கு ஆள் தேட ஆரம்பித்துள்ளார்.
அது மட்டுமல்ல... இன்னும் சில விஷயங்களும் இதே போல ஸ்பீடாக லீக் ஆகி இருக்கின்றன. சட்டமன்றக் கூட்டத்தில் தூத்துக்குடி விவகாரத்தைச் சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்வது, போட்டி சட்டமன்றம் நடத்துவது எல்லாம் ஸ்டாலின் முன்கூட்டியே போட்ட திட்டம். செயல் தலக்கு மிக நெருக்கமாக உள்ளவர்களுக்கு மட்டுமே இது தெரியும். ஆனால், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முன்பாக இந்தத் தகவல் எடப்பாடி கவனத்துக்குப் போயிருக்கிறது. திமுகவில் நடக்கும் ஒவ்வொரு மூவையும் எடப்பாடியார் முன்கூட்டியே தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல ஆரம்பித்திருக்கிறாராம். அப்படின்னா திமுகவில் ஸ்லீப்பர் செல் இருக்கிறதா என கேட்பவர்களும் குழம்பி வருகிறார்களாம்.
சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே, ‘போட்டி சட்டமன்றம் நடத்துவாங்க பாருங்க...’ என்று சொல்லி சிரித்திருக்கிறார். அதேபோலத்தான் செயல் தல வெளிநடப்பு செய்தார். போட்டி சட்டமன்றம் எனவும் அறிவித்து அதையும் நடத்தினார்.
திமுகவில் அதுவும், ஸ்டாலின் வீட்டுக்குள் பேசும் தகவல்கள் எப்படி வெளியே போகின்றன என்பது இன்னும் அவர்களுக்குத் தெரியவில்லை. தமிழக உளவுத் துறையைப் பொறுத்தவரை அந்த அளவுக்கு விரைவாகச் செயல்படக்கூடியது இல்லை என்று நம்புகிறார்கள் திமுகவினர். அப்படியானால் எடப்பாடிக்கு திமுகவிலிருந்தே தகவல் போகிறதா என்று விசாரித்திருக்கிறார்கள். ஜெயலலிதா கூட இப்படி வேவு பாக்கும் வேலையை செய்ததில்லை, எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக அடிக்கும் வல்லமை கொண்டவர் அவர். ஆனால், சசியால் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றிய இந்த எடப்பாடிக்கு இப்படி ஒரு கிரிமினல் மைண்டா என கண்டுபிடிக்கமுடியாமல் திணறி வருகிறது செயல் தல & டீம்”