EPS vs Stalin : பெருந்துறையில் உள்ள நிறுவனத்திற்கு ஸ்பெயின் சென்று ஒப்பந்தமா.? ஸ்டாலினை சீண்டும் எடப்பாடி

By Ajmal Khan  |  First Published Feb 1, 2024, 8:03 AM IST

இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் வலுவான இலாக்கக்களை பெற்று ஊழல் செய்யலாம் என ஸ்டாலின் எண்ணுகிறார். அது ஒரு போதும் நடக்காது. இண்டியா கூட்டணி தோல்வி அடைய போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


மக்களை கை விட்ட திமுக அரசு

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான  எம் ஜி ஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அதிமுக வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் ஏற்பாட்டில்  10,107 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  அதிமுக ஆட்சி காலங்களில் சந்தித்த பேரிடர்களை திறம்பட கையாண்ட அரசு அதிமுக அரசு, ஆனால் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவிகளையும் செய்யாத அரசு திமுக அரசு என விமர்சித்தார். 

Latest Videos

இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு! அரசே மது விற்கும் அவலத்தால் 100க்கும் மேற்பட்ட கொலைகள்! லிஸ்ட் போட்ட பாஜக!

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி

வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்த போதும் தென் மாவட்டங்களிலும் தேவையான முன் எச்சரிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஊழல் செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள திமுக அரசு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்கவில்லை.  அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் ஓராண்டில் பணிகள் முடிக்கப்பட்டிருக்கும் பணிகள் எதுவும் முடிக்காமலேயே 98% பணிகள் முடிந்துவிட்டதாக அமைச்சர்களும் மேயரும் பொய் சொன்னார்கள். கொரோனா காலக்கட்டத்தில் கூட மக்களை சுபிக்‌ஷமாக வைத்திருந்த அரசு அதிமுக.  

மக்களுக்காக கட்சி நடத்தியவர் எம்.ஜி.ஆர் ஒரு குடும்பத்துக்காக நடத்தும் கட்சி தான் திமுக அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஒரு சாமானியன் கூட அதிமுகவில் பொதுச் செயலாளர் ஆக முடியும். இந்தியாவில் வேறு எந்த கட்சியிலாவது இப்படி நடக்குமா குறிப்பாக திமுகவில் நடக்குமா என கேள்வி எழுப்பினார். 

கிளாம்பாக்கம் அரைகுறை பணி

அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும் திமுகவில் யார் அதிக வசூல் செய்து தருகிறார்களோ அவர்களுக்கு தான் மரியாதை கிடைக்கும். இந்தியாவிலேயே நெ 1 முதலமைச்சர் என ஸ்டாலின் சொல்லிக்கொள்கிறார் அவர் எதில் நெ 1 ?ஊழல் செய்வதில், கடன் வாங்குவதில் தான் நெ 1. மோசமான முதலமைச்சர் பட்டியலில் ஸ்டாலின் தான் முதலிடம்.  ஆட்சி அதிகாரம் குடும்பத்தினர் கையில் சென்றுவிட்டது. திறமையற்ற பொம்மை முதலமைச்சராக உள்ளார் ஸ்டாலின். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அரைகுறையாக பணிகள் முடிப்பதற்கு முன்னரே திறக்க வேண்டிய அவசியம் என்ன? எல்லா பணியும் நிறைவு பெற்ற பிறகு திறந்தால் என்ன? எங்கு ஆட்சி போய் விடும் என்ற பயத்தில் திறந்துவிட்டார்கள். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை நம்பி வாக்களித்த அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர்.

ஸ்டாலின் ஸ்பெயின் சென்றது ஏன்.?

வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என சொல்கிறார்கள். ஆனால் கார் ரேஸ் நடத்துவதற்கும், எழுதாத பேனாவுக்கு சிலை வைக்க மட்டும் எப்படி நிதி வந்தது பேனா சிலை வைப்பதற்கு பதில் மாணவர்களுக்கு பேனா வாங்கி கொடுத்தால் அவர்களாவது மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்.  பெருந்துறையில் உள்ள ஆளுக்கு புரிந்துணர்வு மேற்கொள்ள ஸ்பெயினுக்கு சென்றுவிட்டார் முதலமைச்சர்.  அதை இங்கேயே மேற்கொண்டிருக்கலாமே. சமீபத்தில் தான் முதலீட்டு மாநாடு நடந்தது அப்போது புரிந்துணர்வு மேற்கொள்ளாமல் இப்போது ஏன் செல்ல வேணும். ஸ்பெயினே பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் நிலையில் அங்கு சென்று முதலீட்டு மாநாடு நடத்த சென்றுள்ளார் முதலமைச்சர். இதுவரைக்கும் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் கிடைத்த முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா? 

இந்தியா கூட்டணி வெற்றிபெறாது

ஊழல் செய்த பணத்தை முதலீடு செய்ய தான் முதலமைச்சர் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இண்டி கூட்டணியில் ஸ்டாலின் உள்ளார். கடந்த தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமராக முன்மொழிந்தார் ஸ்டாலின். வரும் தேர்தலிலும் இண்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறாது. இண்டி கூட்டணி வெற்றி பெற்றால் வலுவான இலாக்காக்களை பெற்று ஊழல் செய்யலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார்.  அது ஒரு போதும் நடக்காது. ஒரு அமைச்சர் ஜெயிலில் உள்ளார். இன்னும் ஆறு மாதத்தில் எத்தனை அமைச்சர்கள் சிறையில் இருக்க போகிறார்கள் என்பததை பார்க்க தான் போகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி!

click me!