திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை; காங். மட்டும் தான் பேசியுள்ளது - துரைமுருகன்

By Velmurugan s  |  First Published Jan 31, 2024, 6:06 PM IST

தமிழகத்தில் திமுக கூட்டணி இன்னும் பேச்சுவார்த்தையை துவங்கவில்லை. காங்கிரஸ் மட்டும் பேசிவிட்டு சென்றுள்ளனர் என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியில் புதியதாக பொன்னை ஆற்றின் குறுக்கே அமைக்கபடும் மேம்பாலம் மற்றும் பொன்னை அரசினர் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றை தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Tap to resize

Latest Videos

இதனைத் தொடர்ந்து பொன்னை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரள அரசுடன் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார். முல்லை பெரியாறில் ஒன்றும் பிரச்சினை இல்லை. மேகதாது அணை விவகாரத்தில் ஆய்வு செய்தாலும், அவர்கள் படம் வரைந்தாலும் அந்த திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதலும், மத்திய அரசு ஒப்புதலும் வேண்டும். அமைச்சர் அவர் தொகுதி என்பதால் கர்நாடக அமைச்சர் இதனை வேகமாக செய்கிறார். 

செலவுக்கு பணம் தராத தந்தையை வெட்டி கொன்ற மகன்; புதுக்கோட்டையில் பரபரப்பு

மழைவெள்ள பாதிப்புகள் குறித்து நீர்பாசன துறை சார்பில்  மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்ப உள்ளோம். உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று தான் துவங்கியுள்ளோம். எங்களுடைய திட்டங்கள் எவ்வளவு வெற்றியடைந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும். அரசியல் என்பது திருவிளையாடல் தான். இது போன்று கட்சி மாறுவது போன்ற திடீர் திடீர் செய்திகள் வரும் இவைகள் எல்லாம் பழையது தான். நாங்கள் தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறோம். 

அரசுப்பள்ளி சுவரில் காவி உடையில் திருவள்ளுவர் படம்; அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு

திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. காங்கிரஸ் மட்டும் தான் பேசிவிட்டு சென்றுள்ளனர். அரசியலில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவார்கள். பழையவைகளை பேசுவது ஆண்மை இல்லாத தனம். இந்திய கூட்டணியில் இன்னும் இறுதி முடிவு செய்யபடவில்லை. அதன் பின்னரே யார் இருக்கிறார்கள்? யார் செல்கிறார்கள்? என்பது தெரியவரும். சேர்க்காடு அரசு புதிய மருத்துவமனை மேலும் மூன்றடுக்கு உயர்த்துவது மிகவும் நிம்மதி. அம்மருத்துவமனையில் விபத்து, அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் அங்கேயே மேற்கொள்ளப்படும் என கூறினார்.

click me!