605 கோடி ரூபாயா..? வரலாற்று சாதனை படைத்த எடப்பாடி அரசு... வயிற்று எரிச்சலில் ராமதாஸ்...!

Published : Jan 21, 2020, 01:00 PM ISTUpdated : Jan 21, 2020, 01:04 PM IST
605 கோடி ரூபாயா..? வரலாற்று சாதனை படைத்த எடப்பாடி அரசு... வயிற்று எரிச்சலில் ராமதாஸ்...!

சுருக்கம்

தமிழக அரசு மதுக்கடைகள் நடத்துவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர் பாமக நிறுவனர் ராமதாஸ். தற்போது ஆளும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்றும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை பாமக சார்பாகவும் நடத்தி வருகிறார். அதோடு, தமிழகத்தில் பொங்கல் அன்று மது விற்பனை 605 கோடிக்கு விற்பனை நடைபெற்றதை நினைத்து தனது வயிறு எரிவதாக பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது என ராமதாஸ் கூறியுள்ளார். 

தமிழக அரசு மதுக்கடைகள் நடத்துவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர் பாமக நிறுவனர் ராமதாஸ். தற்போது ஆளும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்றும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை பாமக சார்பாகவும் நடத்தி வருகிறார். அதோடு, தமிழகத்தில் பொங்கல் அன்று மது விற்பனை 605 கோடிக்கு விற்பனை நடைபெற்றதை நினைத்து தனது வயிறு எரிவதாக பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு அறிக்கையில்;- இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும். இந்த அவலம் என்று தீரும்? 

இதையும் படிங்க;-  கல்லா கட்டிய எடப்பாடி அரசு... பொங்கல் பண்டிகையின் மது விற்பனை எவ்வளவு தெரியுமா..?

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் 3 நாட்களில் ரூ. 605 கோடிக்கு மது விற்பனை: செய்தி - கரும்பு விற்பனையாகவில்லை... இஞ்சி, மஞ்சள் கொத்துகளை வாங்க ஆள் இல்லை. மதுக்கடைகளில் மட்டும் மாநாட்டுக் கூட்டம். தமிழன் என்றொரு இனமுண்டு... தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பார்களே.... அது இது தானோ? 

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவையொட்டி ரூ.605 கோடிக்கு மது விற்பனை. வரலாற்று சாதனையாம். ஆஹா.... இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் குடிப்பதில் சாதனைகளை மட்டும் தான் படைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்களாம். அடக் கொடுமையே? பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்கல் தான் பொங்கும். ஆனால், இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது. முதல் பொங்கல் வயிற்றை நிறைக்கும்... இரண்டாவது பொங்கல் வயிற்றை அரிக்கும். தமிழா நீ மதுவை கைவிட்டு தலைநிமிர்வது எந்நாளோ? பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!