கொத்தாக தூக்க நினைச்ச பாஜக... கெத்தாக நீதிமன்றத்தில் தடை வாங்கிய கார்த்தி சிதம்பரம்..!

Published : Jan 21, 2020, 12:37 PM IST
கொத்தாக தூக்க நினைச்ச பாஜக... கெத்தாக நீதிமன்றத்தில் தடை வாங்கிய கார்த்தி சிதம்பரம்..!

சுருக்கம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவரது மனைவி ஸ்ரீநிதி. இருவரும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ.4.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். 

முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் கார்த்தி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி மீதான வருமானவரித்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவரது மனைவி ஸ்ரீநிதி. இருவரும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ.4.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். 

ஆனால், சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடியும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் ரூ.1.35 கோடியும் வருமான வரி கணக்கில் காட்டவில்லை.அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கானது எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கு விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவிற்காக ( ஜனவரி 21) இன்று நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருவரும் நேரில் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் நீதிபதி எச்சரித்தார்.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியும், மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரி நேற்று கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர், நீதிபதி முன் முறையீடு செய்தார். ஆனால், நீதிபதி நிராகரித்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கார்த்தி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி மீதான வருமானவரித்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய 27-ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!